Header Ads



கல்முனையில் கைதான 31 பேரை விடுவிக்க நடவடிக்கை


(எஸ் .எல். அப்துல் அஸீஸ்)

கல்முனை பொலிஸ்பிரிவுக்குள் கைதுசெய்யப்பட்ட 31 நபர்களையும் விடுவிப்பது தொடர்பான கூட்டம் இன்று கல்முனை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

கண்டி, திகண பிரதேசத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் கண்டித்தும், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக்கோரியும்  அம்பாறை மாவட்டத்தில் இன்று  கடையடைப்பும், துஆ பிராத்தனையும் இடம்பெற்றது.

இதே வேலை  கடையடைப்பு மற்றும் களகம் விலைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்ட    கல்முனை மாநகர  பிரதேசத்தின்   மருதமுனை, நற்பிட்டிமுனை, கல்முனை, சாய்ந்தமருது  ஆகிய ஊர்களை சேர்ந்த 31 நபர்களை  விடுவிப்பு செய்வது  தொடர்பான கூட்டம்  கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.கே.எஸ். ஜெயனித்தி தலைமையில்  கல்முனை பொலிஸ் நிலையத்தில் இன்று மாலை  இடம்பெற்றது. 

பொலிஸ் உயர் அதிகாரிகள், இராணுவ  உயர் அதிகாரிகள், அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கைதுசெய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள் போன்றோர் கலந்துகொண்ட இக் கூடடத்தில்  கைதுசெய்யப்பட்ட 31 நபர்களில் நேரடியாக சம்மந்தப்பட்ட ஒரு சிலரை தவிர்த்து ஏனையவர்களை விடுதலை செய்தல் என முடிவு செய்யப்பட்டது. 

No comments

Powered by Blogger.