Header Ads



ஜனாதிபதியிடம் தூதுபோன 3 அமைச்சர்கள்


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட பொருளாதார முகாமைத்துவ குழுவை கலைக்க வேண்டாம் என ஐ.தே.கவின் முக்கிய அமைச்சர்கள் மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சர்களான மங்கள சமரவீர, கபீர் ஹாஸிம் மற்றும் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் கடந்த 28ஆம் திகதி இரவு ஜனாதிபதியை சந்தித்தபோது இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

90 நிமிடங்கள் இடம்பெற்ற இந்தப் பேச்சு பிரதமரும் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, குறித்த பொருளாதார முகாமைத்துவ சபையை கலைக்குமாறு ஜனாதிபதி தீர்மானம் மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. தீர்மானம் எடுக்க முன்பு முன்யோசனை செய்யாது உடனடித் தீர்மானம் எடுப்பவர்கள் கண்ணை மூடிக் கொண்டு அதை மாற்றுவார்கள். இந்தவகையினர் ஒரு நாட்டின் தலைவராக இருக்க எப்படி தகுதிபெறமுடியும். தான் எடுத்த முடிவை தலை போனாலும் மாற்றாத தலைவர்கள் தான் இலங்கைக்குத் தேவை.

    ReplyDelete

Powered by Blogger.