Header Ads



அவசரகால நிலைமையை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்க ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

அவ­சர காலநிலை­மையை மேலும் இரண்டு வாரங்­க­ளுக்கு நீடிக்­கு­மாறு ஜனா­தி­ப­தி­யிடம் தான் கோரிக்கை விடுத்­தி­ருப்­ப­தாக இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்தார்.

நாட்டின் நிலை­மையை கருத்தில் கொண்டு அவ­ச­கார கால நிலை­மையை மேலும் இரண்டு வாரங்­க­ளுக்கு நீடிக்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­தி­ருப்­ப­தாக அவர் கூறினார்.

வன்­முறைச் சம்­ப­வங்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் முழு­மை­யாக கைது செய்­யப்­பட்டு விசா­ர­ணைகள் முடியும் வரை இந்த அவ­சர காலச் சட்­டத்தை நீடிக்க வேண்டும் எனவும் நாம் கோரி­யி­ருக்­கின்றோம்.

இந்த வன்­மு­றைகள் வேறு பிர­தே­சங்­க­ளிலும் ஏற்­ப­டாமல் இருப்­ப­தற்கும் அல்­லது அவ்­வாறு ஏற்­ப­டு­கின்ற போது முஸ்­லிம்­க­ளுக்கு பாரிய விளை­வுகள் ஏற்ப­டா­ம­லி­ருப்­ப­தற்கும் நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு சில ஆலோ­ச­னை­களை நான் ஜனா­தி­ப­திக் கும் பிர­த­ம­ருக்கும் எழுத்து மூல­மாக கோரி­யுள்ளேன். இது தொடர்பில் தொடர்ச்சியாக சகல தரப்பினரோடும் கலந்துரையாடவுள்ளேன் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.