March 20, 2018

உலகின் மிகச்சிறந்த ஆசிரியருக்கான விருதுடன், 15 கோடி பரிசை வென்றவர்


உலகின் மிகச் சிறந்த ஆசி­ரி­ய­ராக பிரிட்­டனைச் சேர்ந்த ஆசி­ரியை அன்ட்­ரியா ஸஃபீ­ராகோ தெரிவு செய்­யப்­பட்டு 10 இலட்சம் அமெ­ரிக்க டொலர் (சுமார் 15 கோடி ரூபா) பரிசை வென்­றுள்ளார்.

துபாயில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற வைப­வ­மொன்றில் அன்ட்­ரியா ஸஃபீ­ராகோ­வுக்கு மிகச் சிறந்த ஆசி­ரியர் விருது வழங்­கப்­பட்­டது.

இந்­தியத் தொழி­ல­தி­ப­ரான சன்னி வர்­கி­யினால் ஸ்தாபிக்­கப்­பட்ட வர்கி மன்­ற­மா­னது, குளோபல் எடி­யூ­கேஷன் அன்ட் ஸ்கில்ஸ் ஃபோரம் எனும் விழாவை வரு­டாந்தம் நடத்தி, உலகின் சிறந்த ஆசி­ரி­ய­ருக்­கான விருதை வழங்­கு­கி­றது.

இம்­முறை 4 தட­வை­யாக நடத்­தப்­பட்ட உலகின் மிகச் சிறந்த ஆசி­ரியர் விருது விழா­வுக்­காக 173 நாடு­களைச் சேர்ந்த சுமார் 30,000 பேர் விண்­ணப்­பித்­தி­ருந்­தனர்.

10 பேர் கொண்ட இறுதிப் பட்­டி­யலில், துருக்கி, பிரிட்டன், தென் ஆபி­ரிக்கா, கொலம்­பியா, பிலிப்பைன்ஸ், அமெ­ரிக்கா, பிரேஸில், பெல்­ஜியம், அவுஸ்­தி­ரே­லியா, நோர்வே ஆகிய நாடு­களைச் சேர்ந்த ஆசி­ரிய ஆசி­ரி­யைகள் இடம்­பெற்­றி­ருந்­தனர்.
நேற்­று­முன்­தினம் துபாயில் நடை­பெற்ற வைபவத்தில் பிரிட்­டனின் அன்ட்­ரியா ஸஃபீ­ராகோ முத­லிடம் பெற்று, உலகின் மிகச் சிறந்த ஆசி­ரி­ய­ருக்­கான விருதைப் பெற்­றுக்­கொண்டார்.

அவ­ருக்கு ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் உப ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும், துபாயின் ஆட்­சி­யா­ள­ரு­மான ஷேக் மொஹம்மத் பின் ரஷீட் அல் மக்தூம் இவ்­வி­ருதைக் கைய­ளித்தார்.

38 வய­தான அன்ட்­ரியா ஸஃபீ­ராகோ, லண்­ட­னின்’ பிறென்ட் பகு­தி­யி­லுள்ள அல்­பேர்ட்­டன் சமூக கல்­லூ­ரியில் கலை மற்றும் ஆடைத்­துறை ஆசி­ரி­ய­ராக பணி­யாற்­று­கிறார்.

வறு­மை­யான குடும்­பங்­களைச் சேர்ந்த பல மாண­வர்­க­ளுக்கு அன்ட்­ரியா கற்­பிக்­கிறார். இம்­மா­ண­வர்கள் பல்­வேறு நாடு­களைச் சேர்ந்­த­வர்கள். அம்­மா­ண­வர்­களின் கல்­வியில் அதிக அக்­கறை செலுத்தும் ஆசி­ரியை அன்ட்­ரியா, மாண­வர்­களின் பெற்­றோர்­க­ளுடன் வகுப்­ப­றை­யிலும் அவர்­களின் வீட்­டிலும் இணைந்து பணி­யாற்­று­கிறார்.  இதனால் அப்­பெற்­றோ­ருக்கு உற்­சா­க­மூட்­டு­வ­தற்­காக அப்­பெற்­றோர்­களின் தாய் மொழி­க­ளிலும் அடிப்­படை வார்த்­தை­களைக் கற்­றி­ருக்­கிறார் அண்ட்­ரியா. தமிழ் உட்­பட 35 மொழி­களில் அடிப்­படை வார்த்­தை­களை அவர் கற்­றி­ருக்­கி­றாராம்.

பிரித்­தா­னிய முன்னாள் பிர­தமர் டோனி பிளெயர், அவுஸ்­தி­ரே­லிய முன்னாள் பிர­தமர் ஜூலியா கில்லார்ட், பிரான்ஸின் முன்னாள் ஜனா­தி­பதி நிக்­கலஸ் ஸர்­கோஸி அமெ­ரிக்க முன்னாள் உப ஜனாதிபதி அல் கோர் உட்பட பலர் இந்நிகழ்வில் அதிதிகளாக பங்குபற்றினர். உலகின் மிகச் சிறந்த ஆசிரியையாக தெரிவான அன்ட்ரியா ஸஃபீராகோவுக்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

2 கருத்துரைகள்:

ஆசிய நாடுகளில் உள்ள ஆசிரியர்களை, இந்த துபாய் அமீரக அதிபரின் கண்களுக்கு தெரிவதில்லை.

இன ஒதுக்களில் முதன்மையானவர்களாக விளங்கும் மேற்கில் உள்ளவர்கள்தான், இவர்களின் கண்களுக்குப் படுகிறது.

இலங்கையில் முஸ்லிம்கள் இருக்கிறார்களா என்பதுகூட, இவர்களுக்கு தெரியாமல் இருக்கும்.

தெரிந்தாலும் என்ன - இலங்கையில் பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் எரிப்புகள் எல்லாம் இவர்களுக்கு வீடியோ கேம்ஸ் மாதிரி இருக்கும்.

May be so., but we do not have a media to post in Arabic and English.

Post a Comment