February 12, 2018

ஐ.தே.க.யின் தோல்விக்கு Wifi காரணமா..?

-Dc-

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சமூக நிலவரத்தை விளங்காமல் தேர்தல் மேடையில் தெரிவித்த கருத்துக்களும் இந்த தேர்தல் தோல்விக்குக் காரணம் என சிரேஷ்ட ஊடகவியலாளரும் ராவய சஞ்சிகையின் முன்னாள் ஆசிரியருமான விக்டர் ஐவன் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேர்தல் பிரச்சார இறுதிக் கூட்டமொன்றில் மக்களுக்கு அடுத்து வரும் மாதங்களில் “வைபை” (Wifi) வசதியைச் செய்து தருவதாக கூறினார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு சிரிப்பு வந்தது.

நாட்டில் வரிச் சுமையின் காரணமாக தொலைபேசிக் கட்டணம் அதிகரித்துச் செல்வதை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். பிரதமர் மக்களுக்கு wifi  வசதி குறித்து பேசுகின்றார். மக்களின் வாழ்க்கைச் சுமைக்கு மத்தியில் இதுபோன்ற கருத்துக்களை பிரதமர் தெரிவித்தமையும் இந்த தேர்தல் தோல்விக்கு ஒரு காரணம் என்றே தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் முடிவு குறித்து தனியார் ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் விக்டர் ஐவன் இதனைக் கூறினார். 

5 கருத்துரைகள்:

WIFI Uncle better now retair.

ஐக்கிய தேசியக் கட்சி அதன் ஆரம்பம் முதலே சிறுபான்மையினரின் உள்ளங்களை வென்ற, அவர்களை அரவணைத்துச் சென்ற 'யானை' அளவேயான மாபெரும் கட்சியாகும்!

ஆனால், என்று சர்வதேச - இஸ்ரவேல் போன்ற இனவாதிகளோடும், உள்ளூர்  இனவாதத் கட்சிகளோடும்
அது கூட்டு வைத்து இயங்கியதோ அன்றே  அது தனது செல்வாக்கைப் படிப்படியாக இழந்து இன்றைய நிலைக்கு வந்துள்ளது என்பதே உண்மையாகும்.

எதிர்காலத்திலும்,   தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான இனவாத சக்திகளோடு  இவர்கள் கூட்டு வைத்தால் இந்தக் கட்சிக்கு அது ஒரு பெரும் சாபக் கேடாகவே முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சி,  தனது பெயரின் அர்த்தத்திற்கு ஏற்ப தேசிய இனங்களை ஐக்கியப்படுத்தும் கட்சியாகவே ஒவ்வொரு நடவடிக்கையிலும் இருக்க வேண்டும்.

இதனையே இலங்கையர் செழிப்பான இலங்கைக்காக எதிர்பார்க்கிறார்கள்.

சாதாரண பாமர மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு கடந்த 3 வருட அரசியலை இந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என்பதோடு ரணில் விக்ரமசிங்க தேர்தல் பிரச்சாரமும் அந்த வகையில் அமையவில்லை என்பதன் வெளிப்பாடே இந்த தேர்தலின் முடிவும் இந்த விடயத்தை சுட்டிக்காட்டவே விக்டர் ஐவனும் wifi விடயத்தை சுட்டி காட்டி உள்ளார் என்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது. மாறாக free wifi பிரச்சாரம் ஒரு எதிர் விளைவை கொடுத்திருக்கும் என்பது களநிலவரத்தில் இல்லை. இந்த தேர்தலில் மஹிந்த கூடுதலான பிரதேச சபைகளை பெற்றுள்ளாரே ( காரணம் இந்த கலப்பு தேர்தல் முறையாகும்) தவிர மக்களின் செல்வாக்கு அவருக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலை விட 8, 9 இலட்சம் வாக்குகள் குறைவாகவே பெற்றுள்ளார். அதே நேரம் மகிந்தவுக்கு எதிரான வாக்குகள் இந்த தேர்தலில் மூன்றாக பிரிந்துள்ளது. ஆனால் ரணில் விக்கரமசிங்க தனக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை, வாக்கு வங்கியை அதிகரிக்க தவறியுள்ளார் என்பதே யதார்த்தம். இருந்தாலும் அவர்களுக்கு இருக்கும் காலத்தை சரியாக பயன்படுத்துவார்களானால் நிட்சயம் முன்னேற்றத்துக்கு இடம் உண்டு.

UNP செய்துள்ள மடத்தனமான வேலைகளின் பட்டியல்

1. ஊளல் செய்த மகிந்தவையும் அவரது கூட்டத்தையும் தப்பவிட்டது

2. ஊளலை ஒழிப்பதாகக்கூறி ஆட்சிக்கு வந்து - மிகப்பெரிய மத்திய வங்கி ஊளல் தமது ஆட்சியிலேயே நடைபெறக் காரணமாக அமைந்தது

3. முன்னய ஆட்சியின் கடனைக் காட்டியே நாட்டில் எந்த அபிவிருத்தி வேலைகளும் நடைபெறாமல் இருந்தது

4. பெண்களுக்கு மது வாங்க உரிமைப்பத்திரம் வளங்க முனைந்தது

5. வரிச்சுமை அதகரித்துள்ள நிலமையில் Wifi பற்றிக் கதைக்கின்ற இழிநிலை

6. இனவாதம் கோலோச்சுமபோது கைகட்டிப் பாரத்துக் கொன்டிருந்த கையாலாகாத ஆட்சி

7. இப்படிப் பலப்பல

Post a Comment