Header Ads



இலவச Wifi வழங்குவதற்கு, பெற்றோர்கள் விரும்புவதில்லை - ரணில்

இவ்வாண்டு முடிவுக்குள், இலவச வை-ஃபை இணைய இணைப்பைப் பொதுமக்களுக்கு வழங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படுமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று (06) உறுதியளித்தார்.

புத்தளத்தில் இடம்பெற்ற ஐ.தே.கவின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றிலேயே, அவர் இவ்வுறுதிமொழியை வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகள், ஏப்ரல் மாதத்தில் முதன்முறையாக மேற்கொள்ளப்படும் எனக்கூறிய அவர், அனைத்துக் கிராமங்களும், ஆண்டிறுதிக்குள் இணைக்கப்பட்டுவிடும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

வை-ஃபை வசதியின்றி, அலைபேசியொன்றை இயக்குவது, மிகப்பெரிய பிரச்சினைகளுள் ஒன்றாக மாறிவிட்டது என்றும் குறிப்பிட்டார்.

"அனைவரிடமும் திறன்பேசிகள் உள்ளன. ஆனால், இணைய இணைப்பைப் பெறுவதில் பிரச்சினைகள் காணப்படுகிறது. அதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பின்னர், இணையத்தை அணுக முடியும். இலவச வை-ஃபை வழங்கப்பட்ட பின்னர் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம். இளைஞர்களுக்கு இலவச வை-ஃபை வழங்குவதற்கு, பெற்றோர்கள் விரும்புவதில்லை. இலவச வை-ஃபை வசதியில், சிறுமிகள் என்ன செய்வார்கள் என எனக்குத் தெரியவில்லை" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.