Header Ads



UNP அமைச்சர்களை கொழும்பிலிருந்து, வெளியேற வேண்டாமென உத்தரவு - SLFP 10 பேர் பல்டிக்கு தயார்..?


30 பேரைக் கொண்ட அமைச்சரவையுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை அமைக்க அந்த கட்சியினர் தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையமான சிறிகொத்தவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் போதுமான பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சுமார் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அது மிகவும் வெற்றிகரமான மட்டத்தில் இருப்பதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

மகிந்த ராஜபக்ச தரப்பை கடுமையாக எதிர்க்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுனவுடன் இணைந்தால், இவர்களில் சிலர் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த அமைச்சர்களை கொழும்பில் இருந்து வெளியேற வேண்டாம் என கட்சியின் தலைமைத்துவம் அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.