Header Ads



ஒரே பார்வையில், இறுதி முடிவுகள் - முழு விபரம் இணைப்பு, (SLPP 239, UNP 42, TNA 38)


2018 ம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 340 உள்ளூராட்சி மன்றங்களில் 239 மன்றங்களில் வெற்றிப்பெற்று ஶ்ரீ லங்கா பொது ஜன முன்னணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 42 உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றியுள்ளதுடன் , இலங்கை தமிழரசு கட்சி 38 மன்றங்களை கைப்பற்றியுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளடங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 7 மன்றங்களில் வெற்றிப்பெற்றுள்ளது.

340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8ஆயிரத்து 325 பேரை தெரிவு செய்வதற்காக நேற்று இடம்பெற்ற தேர்தலில் மொத்தமாக 49 இலட்சத்து 66 ஆயிரத்து 203 வாக்குகளுடன் அதிக ஆசனங்களைப் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி பெற்றிருந்தது.

மொத்தமாக 45.31 % சதவீத வாக்குகளை அந்த கட்சி பெற்றிருந்தது.

இதேவேளை , 25 மாவட்டங்களில் 19 மாவட்டத்தின் பெரும்பான்மையை அக்கட்சி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

8325 உறுப்பினர்களின் 2949 உறுப்பினர்கள் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செல்லுபடியான மொத்த வாக்குகளில் 32.23 சதவீத வாக்குகளைப்பெற்றுள்ள ஐக்கிய தேசிய கட்சி 36 இலட்சத்து 21ஆயிரத்து 338 வாக்குகளைப்பெற்று இரண்டாமிடத்தை பிடித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து 2041 உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழரசு கட்சி 38 மன்றங்களில் வெற்றிப்பெற்றுள்ள நிலையில் , அக்கட்சி சார்பாக 523 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3 உள்ளூராட்சி மன்றங்களிலும் , இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 4 உள்ளூராட்சி மன்றங்களிலும் வெற்றிப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Salaams,

    "The Muslim Voice" wishes to express our sincere thanks to the Muslim voters for defeating the SLFP Mayoral Candidate - "lock-stock-and-barrel".

    "The Muslim Voice" had constantly requested to reject such deceptive Muslim politicians who have been throughout, hoodwinking the humble Muslim voters for their personal gains and their selfish needs without considering the general interest of the community.

    The defeating of Azad Sally at the Municipal Council elections by the Muslims of Colombo should be considered as a landmark political incident in supporting the community to create a "NEW POLITICAL FORCE" with new Muslim leadership having "DIGNITY, HONOUR and HONESTRY" to stand-up to the challenges that the Muslim community will face in the coming future, Insha Allah.

    EVERYONE PLANS, BUT ALLAH HAS BETTER PLANS, Insha Allah.

    Wassalaam.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.