Header Ads



NFGG மீது தாக்குதல், சந்தேகத்தை கிளப்பும் ஹிஸ்புல்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ..

இன்று திங்கட்கிழமை (12) காலை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி காரியாலயத்திற்கு அல்லது சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்களின் இல்லத்திற்கு ஒரு வகையான குண்டு வீசப்பட்டதாக அறியக்கிடைத்தது.

உடனடியாக நான் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு அச் சம்பவம் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறும் அருகிலுள்ள சீ.சீ.டி.வி  கெமராக்களை ஆராய்ந்து ஏதோ ஒரு வகையில் அடையாளம் காண முடியுமாக இருந்தால் இதனோடு சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு உடனடியாக அவர்களை கைது செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்தேன்.

அந் நேரம் பொலிசாரின் தகவலின் படி கடந்த வாரமும் காத்தான்குடியில் இவ்வாறான குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஆதரவாளர் ஒருவரின் வீட்டிலும் இடம்பெற்றிருந்தது. அச் சம்பவத்தின் போது வெடித்த குண்டு வெளியில் இருந்து வீசப்படவில்லை உள்ளே உள்ள விசயம் என அறிந்த சூழ்நிலையிலும் விசாரணையின் போது வேண்டுமென்றே வைக்கப்பட்டதாகவும் அறிகிறேன். அதே பொருட்கள் அதே வகையான முறையிலே தான் இக் குண்டு வெடிப்பு சம்பவமும் இடம்பெற்றிருப்பதாக அறிகின்றேன். ஆகவே இது அவர்களுக்குள்ளேயே திட்டமிட்டு என் மீது பலி சுமத்துவதற்காக அல்லது எங்கள் மீது வேறு ஏதாவது பிரச்சனைகளை உண்டுபண்ணுவதற்காக இப்படியான செயல்களை செய்கிறார்கள் என்று சந்தேகம் கூட எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. 

எனவே நான் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரிக்கு சொன்னேன்; திட்டமிட்டு இதை செய்கிறார்களா அல்லது வெளியில் இருந்து வீசப்பட்டதா என்பது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

ஆகவே குறிப்பாக இந்த சம்பவங்களில் எக் காரணம் கொண்டும் எங்களுடைய ஆதரவாளர்கள் யாரும் ஈடுபடவில்லை என்பதை மிக தெளிவாக சொல்லி வைக்க விரும்புகின்றேன். 

நேற்று இரவு சகல வேட்பாளர்களையும் அவர்களுடைய ஆதரவாளர்களையும் நான் நேரடியாக சந்தித்து எந்த காரணம் கொண்டும் நீங்கள் எந்த சூழ்நிலையிலும் அமைதியை குழைக்கின்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது. குறிப்பாக எமக்கு சிலர் எதிர்த்து வாக்களித்திருந்தாலும் அவர்களை அவர்களின் வீடுகளுக்கு சென்று சந்தித்து உங்களுடைய உடன்பிறப்புக்கள், சகோதரர்கள் அவர்கள் இந்த முறை எதிர்த்து வாக்களித்தாலும் அடுத்த முறை அவர்களுடைய ஆதரவு எமக்கு தேவை.

எனவே அவர்களை சந்தித்து அடுத்ததடுத்த தேர்தல்களில் அவர்களுடைய ஆதரவை தருவதற்காக எங்களுக்கு ஆதரவளிக்குமாறும் அவர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் நான் மிக கண்டிப்பான வேண்டுகோளை விடுத்திருக்கிறேன். ஆகவே இந்த சம்பவங்கள் போலியானவை மற்றும் பொய்யானவை என்பதை இந்த சந்தர்ப்பத்தில் சொல்லிவைக்க விரும்புகின்றேன்.

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பா.உ
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்.

1 comment:

Powered by Blogger.