February 02, 2018

நல்லாட்ச்சியை தோற்றுவிக்க றிசாத் வழங்கிய, பங்களிப்பினை ஒருபோதும் ஐ.தே.க. மறக்காது - காவின்த Mp

இந்த நல்லாட்ச்சி அரசாங்கத்தை தோற்றுவிப்பதற்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் வழங்கிய பங்களிப்பினை ஒரு போதும் ஜக்கிய  தேசிய கட்சி  மறந்துவிடாது என தெரிவித்துள்ள கம்பஹா மாவட்ட ஜக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் காவின்த ஜயரத்ன,மறைந்த எனது தந்தை அமைச்சர் ஜயலத் ஜயவர்தன அவர்கள் மக்களுக்கு அபிவிருத்திகளை கொண்டுவர எண்ணிய கனவினை அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இணைந்து நனவாக்குவதற்காக செயற்படப்போகின்றேன் என்றும் கூறினார்.

மன்னார் மாவட்டத்திற்கு வியாழக்கிழைமை வருகைத்தந்த பாராளுமன்ற  உறுப்பினர் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு  மடு சின்னபண்டிவிரிச்சான்  வட்டார வேட்பாளரை ஆதரித்து இடம் பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அங்கு உரையாற்றுகையில் –

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றமொன்றின் அவசியம் உணரப்பட்டது.இந்த ஆட்சி மாற்றத்திற்கான சிறுபான்மை தமிழ்,முஸ்லிம் மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதொரு காலகட்டத்தில் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.அப்போது இவரின் வெற்றிக்கு உதவி செய்வதாக கூறிய பலர் இறுதி தருவாயில் கைகளை விரித்துவிட்டனர்.அன்றை ய சூழ் நிலையில் மஹிந்த ராஜபக்ஷவின் அரசிலும் பலம் பொருந்திய அமைச்சராக இருந்த றிசாத் பதியுதீன் அவர்கள் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை கொண்டுவர வழங்கிய பங்களிப்பு என்பது வேறு எவரைாலும் வழங்கப்படவில்லை.

இவ்வாறானதொரு அரசியல் துார நோக்கும்,மக்கள் தலைவனை  வன்னி மக்கள் பெற்றுள்ளதை பாராட்டுகின்றேன்.

எனது தந்தையுடன் ஒன்றாக அரசியல் செய்த அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் எனக்கும் அரசியல் ரீதியான ஒரு தலைவராக மாறியுள்ளார்.அவர் இந்த மாவட்ட மக்களுக்கு செய்கின்ற பணிகளின் பங்காளராக என்னையும் இணைத்து கொள்ளுமாறு அவரிடமும,உங்களிடமும் கேட்க விரும்புகின்றேன்.

இன்று தமிழ் மக்களின் பிரதி நிதிகள் கூறிக் கொண்டு இங்கு வந்து மேடைப்போட்டு பேசும் அரசியல் வாதிகள்,கொழும்பில் வந்து இந்த மக்களை பற்றி பேசுவதில்லை.இவர்களிடம் கடந்த நகர பிரதேச சபைகளின் ஆட்சிகளை கொடுத்தீர்கள் நீங்கள்,ஆனால் அவர்களால் மின் விளக்குகளை கூட பொறுத்த முடியாத நிலையே காணப்பட்டது.மீண்டும் இவ்வாறானவர்களிடத்தில் மேலும் 5 வருட காலத்தை கொடுப்பீர்களாயின் எதை பெற்றுக் கொள்ளமுடியும் என கேட்கின்றேன்.

யுத்த அழிவுகளால் அனைத்தையும் இழந்த சமூகமாக வடபுலத்து தமிழ்,முஸ்லிம்  மக்கள் இருக்கின்றீர்கள்.உங்களது வாழ்வாதார தேவைகள்,அடிப்படை தேவைகள் என்பனவற்றை பெற்றுக்கொள்ள ஆளுகின்ற அரசாங்கத்தின் உதவி இன்றியமையாதது,இதனை பெருவதற்கு ஒரே வழி தான் வடக்குக்கு அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக இருக்கின்ற றிசாத் பதியுதீன் அவர்களின் கரங்களை பலப்படுத்துவதாகும்.

இந்த தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சி வெற்றி பெருவது உறுதியானது.அதே போல் மன்னார் மாவட்டத்திலும் உள்ள அனைத்து சபைகளின் ஆட்சியும் ஜக்கிய தேசிய கட்சிக்கு வரவேண்டும்.அரசாங்கத்தில் அமைச்சரவையில் அதிகப்படியான அமைச்சர்கள் ஜக்கிய தேசிய கட்சியினர்.பிரதமரும் ஜக்கிய தேசிய கட்சி,இந்த நாட்டில் ஜக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சி செய்த போதுதான் மக்கள் நலன் திட்டங்கள் உருவாக்கப்பட்டன்,முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன் திறந்த பொருளாதார கொள்கையினை அறிமுகப்படுத்தினார்,அதன் பிற்பாடு ரணசிங்க பிரேம தாச அவர்கள்,கம்உதாவ என்னும் வீடமைப்பு திட்டங்களை கிராமங்கள் தோறும் கொண்டுவந்து மக்களுக்கு நிழல் கொடுத்தார்.இன்று நாம் தேவையான மின்சாரத்தை பெறுவதற்கு மறை்நத அமைச்சர் காமினி திசாநாயக்க  அவர்கள் பெரும் பங்களிப்பினை செய்தார்.அதே போல் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் துார நோக்கு சிந்தனை கொண்ட பார்வையினால்  இலங்கை சர்வதேச  ரீதியில் நன்மதிப்பினை பெற்றுள்ளது.

இந்த நல்லாட்ச்சி  அரசாங்கம் தோற்றம் பெறாவிட்டால் இன்று எமது நாட்டுக்கு ஜரோப்பிய ஒன்றியத்தினால் கிடைக்கப் பெறும் ஜீஎஸ்பி சலுகை கிடைத்திருக்காது.இவை கிகை்காமல் போனமைக்கான முழுப் பொறுப்பினனையும் மஹிந்த ராஜபக்ஷவே ஏற்க வேண்டும்.வடக்கு,கிழக்கில் வாழும் தமிழ் ,முஸ்லிம் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதாலும்,அம்மக்கள் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதினால் மனித உரிமைகள் கடுமையாக மீற்பட்டதாலே இந்த நிலை அன்று தோன்றியிருந்தது.பொருளாதாரம் முழுமையான பின்னடைவை கண்டிருந்தது.அபிவிருத்திகள் என்ற போர்வையில் ஒருர கடனை அடைப்பதற்கு மற்றுமொரு கடனை பெற்றனர்.கடன் சுமையினால் நாடு நலிவுற்றதை மறக்க முடியாது.

இன்று அந்த நிலை இல்லை,அவர்கள் பெற்ற கடனை செலுத்தும் அளவுக்கு பொருளாதார மற்றும் வருமானத்தில் அதிகரிப்பு காணப்படுகின்றது.இதனை ஏற்படுத்த பிரதமரும்,ஜக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவழனால் மட்டுமே முடிந்தது.இத்தோடு மட்டும் நின்று விடாமல் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு தேவையான அனைத்தையும்,அமைச்சர் றிசாத் பதியுதீனின் வேண்டுகோளுக்கு அமைய எவ்வித தடைகளுமின்றி பெற்றுக் கொடுத்துவருகின்றார்.

குறிப்பாக எமது இந்த அரசாங்கம் தமிழ் மக்கள் விடயங்களில் கரிசனையுடன் செயற்படுகின்றது.காணாமல் போனவர்கள் தொடர்பில் கண்டறியும் சட்டத்தை கொண்டுவந்துள்ளது.அதன் மூலம் அதன்கான அலுவலகத்தை அமைக்கவுள்ளது.இது இந்த மக்களது நீண்டகால கோறிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும்..

சட்டம் என்பது சகலருக்கும் சமம் என்கின்ற கோட்பட்டினை உண்மைப்படுத்தும் வகையில் எமது பிரதமரின் செயற்பாடு அமைந்துள்ளது.இதனால் 5 சுயாதீன ஆணைக் குழுக்களை  நிறுவியுள்ளோம்.இன்று பொலீஸார் எவ்வித அச்சுறுத்தல்களும்,அளுத்தங்களு ம் இன்றி கடமை செய்ய முடிகின்றது.அதே போல் சுயாதீன நீதிமன்ற செயற்பாடுக்,தேர்தல் ஆணைக் குழு என்பனவற்றை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.அதே போல் மக்கள் தமது உரிமைகளை அடையாளப்படுத்திக் கொள்ள தகவல் அறியும் சட்டத்திற்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அவற்றுக் கெல்லாம் மேலாக மக்களின் கிராமத்தின் அபிவிருத்தி என்பது அத்தியவசியமானது,அதனை  சரியாக செய்ய உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரத்தை எம்மிடம் ஒப்படையுங்கள்,அதன் பிற்பாடு நடை பெறப்போகும் மாகாண சபைகளின் அதிகாரத்தையும் கொடுங்கள்,அடுத்த 2020 நடை பெறும் ஜனாதிபதித் தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் ஜனாதிபதிாக வருவார்,எதிர்கால ஆட்சி ஜக்கிய தேசிய கட்சியினுடையதாகவே இருக்கும் என இங்கு கூறுகின்றேன்.

வடக்கு ,கிழக்கு மக்களினால் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவராக அமைச்சர் றிசாத் பதியுதீனை நாம் பார்க்கின்றோம்.அவரது வேகமும்,மக்கள் மீது கொண்டுள்ள பற்றும் இதனை வெளிப்படுத்துகின்றது.ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க போன்று அமைச்சர் றிசாத் பதியுதீனை யும் எனது அரசியல் தலைவராக ஏற்று  மக்கள் சேவையில் இணைவதற்கு ஆர்வத்துடன் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் காவின்த ஜயரத்ன இதன் போது கூறினார்.

கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரின் இணைப்பு செயலாளர் இர்ஷாத் றஹ்மத்துல்லா ,மற்றும் அமைச்சரின் 

வங்காலை இணைப்பாளர் ராஜன் மார்க்,செல்லத்தம்பு சந்தியாகோ ஆகியோரும் இதன் போது கலந்து கொண்டனர். தேவன் பிட்டி,வங்காலை,பள்ளிமுனை பகுதிகளில் இடம் பெற்ற கூட்டங்களிலும்  பாராளுமன்ற உறுப்பினர்  உரையாற்றினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment