Header Ads



பாராளுமன்றத்தில் காதல்மொழி பேசிய மஹிந்தவும் ரணிலும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சிரித்துக் கொண்டும் சைகை மூலமாகவும் பேசிக்கொண்டு இன்று சபாபீடத்தில் கதைத்துக் கொண்டனர். 

பாராளுமன்றம் இன்று -19- திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. 

இதன்போது பாராளுமன்றத்தின் திருத்தப்பட்ட வரைவு நிலையியற் கட்டளை மீதான விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ சபாபீடத்திற்குள் நுழைந்தார்.

இதன்போது கூட்டு எதிர்க் கட்சியினர் பலர் வருகை தந்து அவருடன் பேசிக்கொண்டிருந்தனர். இதனையடுத்து சற்று நேரத்தின் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சபாபீடத்திற்குள் நுழைந்தார். இதன்போது இருவரும் கண் அசைவின் ஊடாக அறிமுகமாகினர்.

அதன் பின்னர் விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதியுடன் வந்து பேசிக்கொண்டிருந்த போது, இடைநடுவே ஆசனத்தில் அமர்ந்துக்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதிக்கு சிரித்தவாறு ஏதோ கூறினார். 

இதன்போது மஹிந்த ராஜபக்ஷவும் சிரித்துக்கொண்டு சைகை காண்பித்தும் சிரித்தும் பேசினார். 

இதன்போது ஆளும் கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக ஊடகவியலாளர்கள் கலரியை பார்த்து சிரித்தவாறு இருந்தார்.

சுமார் 5 மணிநேரத்திற்கும் அதிகமாக இருவருக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

அதன்பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடதாசியொன்றில் ஏதோ எழுதி எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் படைகல சேவிதரின் ஊடாக அனுப்பி வைத்தார்.

No comments

Powered by Blogger.