Header Ads



சிங்கப்பூருக்கு போன அழைப்பாணை, மீண்டும் திரும்பிவந்தது

பிணைமுறி மோசடி தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் தமது சிங்கப்பூர் முகவரியில் தற்போது இல்லை என குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனருக்கு நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பாணையை அவரிடம் சேர்க்க முடியாமல், மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பவத்தில் முதலாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர், அர்ஜூன் மகேந்திரனுக்கு இரண்டாவது தடவையாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் முன்னிலையில் பிரசன்னமாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த அழைப்பாணை சர்வதேச பொதி பரிமாற்றல் சேவையின் ஊடாக அவரின் சிங்கப்பூர் முகவரிக்கு அனுப்ப நீதிமன்றம், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்திருந்தது.

எனினும் குறித்த முகவரியில் அர்ஜுன் மகேந்திரன் இல்லை என்ற குறிப்புடன், அந்த அழைப்பாணையை சர்வதேச பொதிபரிமாற்றல் சேவை நிறுவனம் இலங்கைக்கே திருப்பி அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், அவரை கைது செய்ய பிடியாணை ஒன்றினை பிறப்பிக்குமாறு குற்றபுலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தை கோரலாம் என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 comments:

  1. கண்ணாம்பூச்சி விளையாட்டுக்காட்டுகின்றார்கள். பொதுமக்கள் எனும் பொம்மைகள் இந்த விளையாட்டைப் பார்த்து ரசிக்கலாம். இறுதியில் பார்த்தால் நீயும் பொம்பை நானும் பொம்பை, அலசிப்பார்த்தால் எல்லாம் பொம்மை அவ்வளவுதான் நல்லாட்சியின் உண்மைநிலைமை.

    ReplyDelete
  2. Yes,perfectly correct which is pts saying.
    We thought the president would do his job correctly. But now he is showing us the big dramas.

    ReplyDelete

Powered by Blogger.