Header Ads



வீட்டுக்கு சென்று பாயை விரித்து, உறங்குவது மேலானது - ஷமல்

இரண்டு வருடங்கள் காலம் தாழ்த்தாமல் ஜனாதிபதித் தேர்தலையும், பொதுத் தேர்தலையும் ஒரே தினத்தில் நடத்தி, அரசாங்கம் மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என முன்னாள் சபாநாயகர் ஷமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராம தொகுதியில் உள்ளூராட்சி சபைகளுக்கு போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர்களுடனான சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பொதுமக்களின் விருப்பமின்றி நான் பிரதமர் பதவியை ஏற்க மாட்டேன். அதற்கு பதிலாக வீட்டுக்கு சென்று பாயை விரித்து உறங்குவது மேலானது.

ஜனாதிபதி இரண்டு வருடங்கள் காலம் தாழ்த்தாது, மக்களின் விருப்பத்திற்கு இடமளித்து தேர்தலை நடத்தி, மக்கள் விருப்பும் அரசியல் கட்சி நாட்டை ஆட்சி செய்ய இடமளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாங்கள், எங்களிடம் இருந்து சென்றவர்கள் அல்லது ஐக்கிய தேசியக் கட்சியினருடன் இணைந்து ஆட்சியமைக்க மாட்டோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு வாக்களித்த மக்கள் இதனை அனுமதிக்க மாட்டார்கள் என நாங்கள் நம்புகிறோம். எமது வேலைத்திட்டங்களும், கொள்கைகளும் ஏனைய கட்சிகளை விட வித்தியாசமானவை.

இதேவேளை, நாங்கள் மற்றைய கட்சிகளுடன் இணைய மாட்டோம். எதிர்காலத்தில் தனித்து ஆட்சியமைக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் ஷமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. உமக்கு ஒரு போதும் பிரதமர் பதவி கொடுக்கப்படமாட்டாது. ராஜபக்ச ஆட்சிக்கு வந்தாலும் உம்மைப் பொறுத்தவரை அது வெறும் கற்பனைமட்டும்தான். எனவே வீட்டுக்குப் போய் பாயைப் போட்டு உறங்குங்கள்.

    ReplyDelete
  2. Hahaha...dreamssssss
    Just if you are good in Addition, subtraction, division...just calculate all the votes an
    d what is the amount people voted for SLPP..
    Against to SLPP is the majority and do not think your voted people only the whole sri lankans...
    All sri lankans are living in all parts of lanka....
    So most majority of the sri lankans are aginst SLPP....
    Therefore, kindly go and sleep in your own home...dont dream much

    ReplyDelete
  3. I want to see the reaction of Rajapakse family memebers on muslim leaders like Rishad & Hakeem once they got the power in upciming elections. Hope they will dismantle all the muslim parties as all muslim leaders got power from them inially to settle down the illegal entries in Mannar dist and other parts of north and ultimate withdrawal of support in the last presudential election.
    If Rajapakse comes to power, muslims will be wiped out from the island before Tamils

    ReplyDelete

Powered by Blogger.