Header Ads



சவால்களை முறியடித்த, போராளிகளை மெச்சுகிறேன் - ஹரீஸ்

கட்சிக்கும் தலைமைக்கும் விடுக்கப்பட்ட சவால்களை முறியடித்து அம்பாறை மாவட்டத்தில் அதிக ஆசனங்களை பெற்றுக்கொள்ள கட்சிக்கு வாக்களித்த போராளிகளை மெச்சுகிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது நன்றி நவிலில் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கட்சிக்கு வாக்களித்த போராளிகளுக்கு நன்றி தெரிவித்தும் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்தும் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே பிரதி அமைச்சர் ஹரீஸ் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாற்றவும் முடியாது, மாறவும் முடியாது - நமதே  கட்சி நமதே ஆட்சி என்ற தாரகை மந்திரத்தினூடாக முஸ்லிம்களின் கட்சி முஸ்லிம் காங்கிரஸ் என்பதை மக்கள் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் மூலம் நிரூபித்துள்ளனர்.

கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுக்கொள்ள வாக்களித்த கட்சியின் கல்முனை, மருதனை, நற்பிட்டிமுனை, இஸ்லாமாபாத் ஆதரவாளர்கள், போராளிகள் குறிப்பாக தாய்மார்கள், சகோதரிகளுக்கு விசேடமான நன்;றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் சாய்ந்தமருதில் கட்சிக்கு ஏற்பட்ட தற்காலிக பின்னடைவின் போதும் தேர்தல் களத்தில் நின்று கட்சியின் வெற்றிக்காக போராடிய வேட்பாளர்களையும் கட்சிக்காக வாக்களித்த போராளிகளையும் பாராட்டுகின்றேன்.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, இறக்காமம், பொத்துவில் ஆகிய சபைகளில் பெரும்பான்மை ஆசங்களையும் அக்கரைப்பற்று, காரைதீவு, நாவிதன்வெளி ஆகிய சபைகளில் கூடுதல் ஆசனங்களை பெற்றுக்கொள்ள வாக்களித்த கட்சியின் போராளிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கட்சி பெரும்பாலான சபைகளை வெற்றி கொண்டுள்ளதுடன் வடக்கு மற்றும் வட-கிழக்கிக்கு வெளியிலுள்ள சபைகளிலும் கூடுதலான ஆசனங்களை கட்சி பெற்று உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாகவும் மாறியுள்ளது. இதன்மூலம் கட்சியின் இருப்பையும் தலைமையையும் மக்கள் பாதுகாத்துள்ளனர்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு தங்களது வட்டார மக்கள் தங்களுக்கு வழங்கிய ஆணையைக் கொண்டு மக்கள் வேண்டி நிற்கும் சகல மக்கள் நலபணிகளை செய்து கொடுக்க திடசங்கப்பம் பூணவேண்டும். 

எதிர்காலத்தில் மக்கள் எதிர்பார்த்து நிற்கின்ற அபிவிருத்தி பணிகளை முஸ்லிம் காங்கிரஸ்  பிரதேச வேறுபாடின்றி புதிய உத்வேகத்துடன் மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. இன்னும் இவர் தேர்தல் முடிவுகளை பார்க்கவவில்லை போலும்

    ReplyDelete

Powered by Blogger.