Header Ads

தலைமையிலிருந்து ஹக்கீமை விலக்குங்கள் - அன்சில்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் கட்சித் தலைமைப்பதவியிலிருந்து நீக்கினால் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஆட்சியமைக்க நான்உடன்படுவேன், இல்லேயேல் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்க்கட்சிஆசனத்தில் அமர வேண்டி வரும் என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள்தவிசாளரும், வேட்பாளரும் சட்டத்தரணியுமான தெரிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியின்போது அவர் இவ்வாறுதெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது போராட்டம் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரானது அல்ல, அது ஹக்கீமின்தலைமைத்துவத்திற்கு எதிரானது. அதற்காக வேண்டி எடுக்கப்பட்ட போராட்டத்தில்ஒருபோதும் நான் சறுகிவிடப் போவதில்லை என்றார்.

எனது உள்ளம் சுத்தமானது அந்த சுத்தத்திற்கு தகுந்த தீர்ப்பை அல்லாஹ் வழங்கியுள்ளான்.

ஹக்கிம் என்ற தனிநபரின் அடாவடித்தனங்களை நான் ஏற்றுக்கொண்டுசென்றிருந்தால் மிக இலகுவாக அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குரிய தவிசாளர் பதவிஎனக்கு கிடைத்திருக்கும்.

ஆனால் அவருக்கெதிராகவும், கட்சியை நம்பிவாக்களிக்கும் எமது மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் வெளியேறிபல போராட்டங்களை நடாத்தி வருகின்றோம். அதில் பாரிய வெற்றியையும் இறைவனின்உதவியால் வெற்றி கண்டுள்ளோம்.

தலைமைப் பதவியிலிருந்து ஹக்கீமை விலக்குங்கள், இந்த கணமே நான் வருகிறேன்,எனது போராட்டம் கட்சிக்குரியது அல்ல, தலைமைப் பதவியில் இருந்து கொண்டு தனிநபரின் ஆதிக்கத்தை அள்ளி வீசுகின்ற போராட்டமே ஆகும்.

நாங்கள் முஸ்லிம்காங்கிரஸ் என்ற அந்த கட்சிக்காகவே பாடுபடுவேன். அதனை துாய பாதைக்குஇட்டுச்செல்லும் வரை எங்கள் போராட்டம் தொடரும் அதுவரை பேராடுவேன்.

எனது போராட்டத்துக்கு சகல வழிகளிலும் உதவி ஒத்தாசைகளை வழங்கிய எனதுஉள்ளங்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றி கூறியவனாகவும், அவர்களுக்காக நான்என்றும் கடமைப்பட்டிருப்பேன் என்றார்

8 comments:

  1. ஏற்றுச்சுரக்காய் கறிக்குதவாது என்பது போல இது ஒரு முட்டாள்தனமான கோரிக்கை... ஒரு பிரதேசசபையின் அதிகாரத்தை பெறுவதற்க்காக தலமையை இழக்ககோருவது என்ன முட்டாள்தன்மான கோரிக்கை... இது இந்த ஜென்மத்திலும் நடக்காது... அனைத்து மக்களையும் முட்டாளிக்கி தான் மட்டும் அறிவாளி என நிறுபிக்க முயள்கிறார்... நீங்கள் முன்வைத்த கோரிக்கையை எத்தனை ஆயிரம் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்களென சிந்தியுங்கள்...

    ReplyDelete
  2. ஒரு பிழையான தலைமைத்துவத்துக்கு எதிராக ஒவ்வொருவரும் தமது சக்திக்கு உட்பட்ட வகையில் எதிர்ப்புக்களை தெரிவிப்பது மாற்றத்துக்கான வழிகளை இலகுவாக்கும்

    ReplyDelete
  3. அதற்க்காக சாத்தியமில்லாத விடயங்களை பேசி தன்னை ஒரு ஹீரோவாக காட்டுவது மக்களை ஏமாற்றும் வேலை... அவரின் சொந்த ஊரிலே அவர்து கதை 100% எடுபடவில்லை..

    ReplyDelete
  4. முஸ்லீம் சமூகம் மிகவும் விரைவாக கவனம் செலுத்த வேண்டிய ஒரு கோரிக்கையையே சகோதரர் அன்சில் அவர்கள் முன்வைத்துள்ளார். நிட்சயம் அது நிறை வேறும். நிறைவேற்றப்பட வேண்டும்.

    ஹக்கீம் அவர்கள் அரசியல் தலைமைத்துவத்துக்கு மாத்திரம் அல்ல அரசியலுக்கே வக்கில்லாதவர். அரசியல் என்பது சுத்த சூனியம். ஒரு அரசியல் வியாபாரியாகும். முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளுக்கும் ஒன்றும் செய்யவில்லை. முஸ்லீம் மக்களின் தொழில்வாய்ப்பு, அபிவிருத்தி ( கல்வி, சுகாதாரம், விவசாயம், வர்த்தகம், பாதை அபிவிருத்தி... இப்படி எதுவுமே இல்லை) ஒன்றுமே இல்லை. ஹிஸ்புல்லா, றிசாத், அதாவுல்லா போன்றவர்கள் செய்தவர்களில் 40% மாவது செய்திருப்பார் என்பது கேவிக்குறியே.

    Good Governance, இதோ ஹக்கீம் அவர்களின் சில விடயங்களை கோடிட்டு காட்டுகிறோம்.

    ** தலைவர் அஷ்ரப் அவர்கள் மரணிக்காமல் இருந்திருந்தால் அந்த தேர்தல் முடிந்த கையோடு ஹக்கீம் அவர்களுக்கு எதிராக மிகவும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைள் எடுக்கப்பட விருந்தது. காரணம் பொலிட்பீரோவில் பேசப்படும் அனைத்து விடயங்களும் ரணிலுக்கு தெரியப்படுத்தப்பட்டமை.
    ** சந்திரிக்கா அம்மையாரால் அமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டமை. காரணம் அமைச்சரவையில் பேசப்படும் விடயங்கள் ரணிலுக்கு தெரிவிக்கப்பட்டமை.
    ** ஒஸ்லோ பேச்சு வார்த்தையில் ஒரு காத்திரமான பங்களிப்பை செய்யாமை. காரணம் அவருக்கு எந்த விதமான அரசியில் அறிவோ, இலக்கோ கிடையாது. மிகவும் சிரமத்துக்கு மத்தியில் முஸ்லீம் சிவில் அமைப்புக்கள் கஷ்டப்பட்டு அவருக்கு உதவியாக சேவையர் மொஹீதீன் அவர்கள் பேச்சு வார்த்தையில் பங்கு கொண்டமை.
    ** ரணிலுடன் சேர்ந்து தேர்தல் கேட்டு விட்டு மஹிந்தவிடம் சரணாகதி அடைந்தது. காரணம்; எங்களுக்கு தெரிந்த காரணங்கள் பதிவிட விரும்பவில்லை. அவர் சொன்ன காரணம் கட்சியை காப்பாற்றுவதட்கு.. அதட்கு விக்டர் ஐவன் கூறியது " தனது மனைவி வேறொருவன்........"
    ** கசினோ சட்டமூலம் ( அனுரா குமார.. காறித்துப்பாத்தாவாகு நீர் எல்லாம் முஸ்லிமா எனக் கேட்டது ), தெவிநுகம சட்டமூலம்,..... ஆதரித்தமை.
    ** பொது பல சேனா, கிரீஸ் மனிதன், பேருவளை கலவரம்,
    ** கடைசியாக வந்த தேர்தல் சட்ட மூலம்.... ஆதரித்தமை.. இப்படி ஒரு தொகை உண்டு...

    Good Governance, ஹக்கீம் அவர்கள் செய்த ஓரிரு நல்ல விடயங்களோ, சேவைகளோ உங்களால் கூற முடியுமா? உங்களை போன்றவர்கள் அன்சில்களாக மாறினால், நிட்சயம் ஹக்கீமின் தலைமைத்துவம் மாற்றப்படும்.

    ReplyDelete
  5. முஸ்லீம் சமூகம் மிகவும் விரைவாக கவனம் செலுத்த வேண்டிய ஒரு கோரிக்கையையே சகோதரர் அன்சில் அவர்கள் முன்வைத்துள்ளார். நிட்சயம் அது நிறை வேறும். நிறைவேற்றப்பட வேண்டும்.

  6. Good Governance, ஜனநாயகத்தில் 100% தேவையில்லை. பெரும்பான்மை இருந்தாலே போதும்.

    ReplyDelete
  7. Good Governance, ஜனநாயகத்தில் 100% தேவையில்லை. பெரும்பான்மை இருந்தாலே போதும்.

    ReplyDelete
  8. Mr. Good Governance,

    சட்டத்தரணி அன்சில் தன் சக்திக்கு உட்பட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறார். உங்கள் பிரச்சனை அவர் அப்படி பேசியதா இல்லை மேல் மாகாணத்தான் ரவுப் ஹக்கீமை பதவி விலக சொல்வதா? இங்கு பிரதேச வாதம் முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது ஹக்கீமின் கைத்தத்டி ரஜாப்தீன் என்பவரால் என்பதை கருத்தில் கொள்க. அன்சில் அவர்களால் இந்தளவு தான் பேச முடியும், ஹக்கீமின் அமைச்சு பதவியை பறிப்பேன் என்று பேச முடியாது. அடுத்து கிழக்கு மாகாணத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்க்றேஸ் கோவணத்தை கிழித்த ராஜப்டீனுக்கு எதிராக ஹக்கீம் எடுத்த நடவடிக்கையில் தெரியும் மேல் மாகாணத்தான் பாசம்

    ReplyDelete

Powered by Blogger.