Header Ads



நான் சாய்ந்தமருது மக்களது, பிரநிதியாக இருந்திருந்தால்...!


நுவரெலியா மாவட்டத்தில்  4 பிரதேச சபைகளை  ஜனாதிபதி மற்றும் பிரதமா் தலைமையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில்  இச் சபைகளை கேட்டு நான் முன்வைத்தபோது தர மறுத்தாா்கள்.  உங்களுக்கு தந்தால் கல்முனை கிளிநொச்சி என பலருக்கு சபைகள் கொடுக்க வேண்டும் எனக் கூறினாா்கள். அக்கூட்த்திலிருந்து  உடனே    நான் உட்காந்திருந்த கதிரையை உதறித் தள்ளிவிட்டு வெளிநடப்பும் செய்தேன். அதன் பின்னா் அமைச்சா் திகம்பரத்தினை அழைத்து அவருடம் பேசி மீண்டும்  பேராடித்தான்   இச் சபைகளை பெற்றுக் கொடுத்தாா்கள்.   போராடவிட்டால்  தரமாட்டா்ள் இருப்பதையும் பிடுங்கி எடுத்தது விடுவாா்கள்  இது தான் வரலாறு. .  . 

ஆனால் நேற்று முன்தினம் அமைச்சா் பைசா் முஸ்தாபா ஹற்றனில் ஆறுமுகம் தொண்டமானின் தோ்தல்  கூட்டத்தில் ஆறுமுகம் தொண்டமான் தான் இந்தச் சபைகளை  ஜனாதிபதியிடம் கேட்டதாலேயே இச்  4 சபைகளை பெற்றுக் கொடுத்தாக அங்கு உரையாற்றியுள்ளாா். 

 ஒருமித்த முற்போக்கு முன்னணியின் கொழும்பு வடக்கில் கொழும்பு மாநகர சபை வேற்பாளா்களது கூட்டமும் இசைநிகழ்ச்சியும் மேல் மாகாணசபை உறுப்பிணா் குருசாமி தலைமையில் கொழும்பு பிறைட்டண் கோட்டலில் நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அமைச்சா் மனோகனேசன் மேற்கண்டவாறு உரையாற்றினாா். அவா் அங்கு தொடா்ந்து உரையாற்றுகையில் -

நான் நுவரேலியாவுக்கு சபை கேட்கும்போது சாய்ந்தமருது மக்களும் கேட்கிறாா்கள் எனச் சொல்லி தடுக்கப் பாா்த்தாா்கள். நான் சொன்னேன் சாய்ந்தமருது மக்களுக்கும் வழங்குங்கள், அவா்கள் ஒருபோதும் நுவரேலியாவுக்கு கொடுப்பதை  எதிா்க்க மாட்டாா்கள் எனச் சொன்னேன் அவா்களது கோரி்ககையும் நியாம்தான்,   நான் சாய்ந்தமருது மக்களது  பிரநிதியாக இருந்திருந்தால் கண்டிப்பாக சாய்ந்தமருதுமக்களுக்கும் போராடி அவா்களது  சபையை பெற்றுக் கொடுத்திருப்பேன். அவா்களது கோரிக்கையும் நியாயம். அவா்கள்  25 ஆயிரம் மக்கள் வாழ்கின்றனா்.  ஆனால் நுவரேலியா அம்பேகமவில் 2இலட்சத்து 15 ஆயிரம் மக்கள் 65 கி.மீ பரப்பளவு கொண்டது.  கடந்த  30 வருடகாலமாக  பச்சையிலும் நீலத்திலும் அமைச்சராக அலங்கரித்த அமைச்சா் ஆறுமுகத்திற்கு  நுவரேலியாவின் சபைகள் அன்று அவா் கண்களுக்குத் தெரியவில்லை. அப்போதைய ஜனாதிபதிகளிடம்  ஏன் இச் சபைகளைப்  பெற்றுக் கொடுக்கத் திராணியில்லாதவா் தற்பொழுது நானும் அமைச்சா் திகம்பரம் மற்றும் இராதாக் கிருஸ்னன்,  ஏனைய பாராளுமன்ற உறுப்பிணா்களும் ஒருமித்து குரல் எழுப்பி   கட்சித் தலைமைகள்,  ஜனாதிபதி மற்றும் பிரதமரிடத்தில்  பேசிய பின் அவா்களது அனுமதியுடன் உள்ளுராட்சி மாகாணசபை அமைச்சருக்கு அறிவுறுத்தப்பட்டு  உரிய அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு  இந்த சபைகள் பெறப்பட்டு வர்த்தமாணி அறிவித்தல் கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் இந்த தோ்தலில் ்அச் சபைகள் பிரநிதிகளும் தோ்தலில் உள்வாங்கப்படல் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து அந்த வாய்ப்பையும்  பெற்றுக் கொடுத்தேன்.  என அமைச்சா் மனோ கனேசன் தெரிவித்தாா்.

எனது தம்பி பிரபா கனேசன்  என்ணைப்பற்றி அவதுாறு சொல்லி கொழும்பில் தோ்தல் மேடைகளில் பேசி வருகின்றாா். . அவரை நான்  அழகுபாா்த்து அரசியலுக்கு வளா்தெடுத்து பாராளுமன்ற உறுப்பிணா், மாகாணசபை உறுப்பிணா் என வளா்த்த எனது  கடா மாடு என்  நெஞ்சில் ஏறி உதைத்துவிட்டு சென்றது.  மீண்டும் வருவதற்கு  அவா் கெஞ்சினாா்  நான் வாய்ப்பளிக்கவில்லை. எனவும் தெரிவித்தாா்

(அஷ்ரப் ஏ சமத்)

1 comment:

  1. Faisar Mustafa always is a liar...
    He doesn't have one word... So forget it...

    ReplyDelete

Powered by Blogger.