Header Ads



எனக்கு எதிரான வழக்கை, விசாரணைக்கு எடுக்க வேண்டாம் - கோத்தபாய

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டாம் என கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் திருத்த மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் ஒன்றை நடத்தி செல்ல அவன்கார்ட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியமை மூலம் அரசுக்கு 11.4 பில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டு, கோத்தபாயவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வழக்கை தொடர்ந்துள்ளது.

ஆணைக்குழு தொடர்ந்துள்ள இந்த வழக்கை விசாரணைக்கு எடுப்பதை இடைநிறுத்துமாறு கோரியே கோத்தபாய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் திருத்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கோத்தபாய தாக்கல் செய்துள்ள திருத்த மனுவில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பபாளர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் கோத்தபாய ராஜபக்ச தம்மைக் கைது செய்ய வேண்டாம் எனக் கோரி மனுவொன்றைத் தாக்கல் செய்து அதில் வெற்றியும் கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.