Header Ads



பெண் ஊழியரின், அதிர்ச்சிகர செயல் - அம்­பாறையில் பரபரப்பு

-Vi-

இட­மாற்­ற­லா­கிச்­சென்ற வைத்­தி­யர்­களின் சம்­ப­ளப்­ப­ணத்தை நான்கு வரு­டங்­க­ளாக சூட்­சு­ம­மான முறையில் மோசடி செய்து பெற்று வந்த சுகா­தா­ரத்­தி­ணைக்­கள பெண் ஊழி­ய­ரொ­ருவர் வச­மாக சிக்­கி­யு­ள்ளார். 

இவ்­வாறு ஒரு கோடியே 10இலட்சம் ரூபாவை மோசடி செய்­தி­ருப்­ப­தாக ஆரம்­ப ­கட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது. விசா­ர­ணை­யின்­போது தான் இம்­மோ­ச­டியை செய்­த­தாக ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

இத்­து­ணி­கர பண­மோ­சடி  அம்­பாறை பிராந்­திய சுகா­தார சேவைகள் பிராந்­திய காரி­யா­ல­யத்தில் இடம்­பெற்­றுள்­ளது. சம்­பவம் பிர­தே­சத்தில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது

இட­மாற்­ற­லா­கிச்­சென்ற 5 வைத்­திய அதி­கா­ரி­க­ளி­னது சம்­ப­ளப்­ப­ணத்தை அம்­பாறை நக­ரி­லுள்ள ஐந்து வெவ்­வேறு வங்கிக் கிளை­களில் தனது கண­வரின் பெயரில் திறக்­கப்­பட்ட வங்கிக் கணக்­கிற்கு கடந்த நான்கு வரு­டங்­க­ளாக அனுப்­பி­வந்­துள் ளார்.

இப்­பெரும் மோச­டியைச் செய்த அப்­பெண்­மணி வேறொரு கல்வி வல­யத்தில் முன்னர் பணி­யாற்றி இட­மாற்­ற­லாகி கடந்த 2013 முதல் சுகா­தாரப் பணி­ம­னை யில் கட­மை­யாற்றி வந்­துள்ளார்.

இவ­ரது கணவர் இரா­ணு­வத்­தி­லி­ருந்து தப்பி வந்­த­வ­ரென்று விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கின்­றது.

கிழக்கு மாகாண பிர­தம கணக்­காய்­வாளர் திணைக்­கள அதி­கா­ரி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களில் முதற்­கட்­டத்தில் 95 இலட்­ச­மென அறி­ய­வந்­த­போ­திலும் அடுத்­த­கட்ட விசா­ர­ணை­யின்­போது இத்­தொகை  ஒரு­கோ­டியே 10 இலட்சம்  ரூபாவைத் தாண்­டு­வ­தாக பிர­தம கணக்­காய்­வாளர் எச்.எம்.ஏ.ரஷித் தெரி­வித்தார்.

தான் கட்­டிய மாடி ­வீட்டின் புது­ம­னை­ பு­கு­வி­ழா­விற்­காக அலு­வ­ல­கத்தில் விடுமுறை எடுத்­தி­ருந்­த­வேளை அக்­கா­லப்­ப­குதி சம்­ப­ளம்­வ­ழங்கும் கால­மா­கையால் தற்­கா­லி­க­மாக வேறொரு அலு­வ­லரை அதற்கு பணிக்­க­மர்த்­தி­ய­வேளை இம்­மோ­சடி அம்­ப­லத்­திற்கு வந்­தது.

தனது புது­மனை குடி­பு­குந்த அன்றே அவர் சிக்­கி­யுள்ளார். பொலிஸ் வீட்டுக் காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விசாரணையின்போது 2013 முதல் 2017 டிசம்பர் வரை தான் மோசடி செய்த பணத்தை மீளச்செலுத்துவதாக அந்த பெண் ஊழியர் ஒப்புக்கொண்டு ள்ளார். தொடர்ந்து விசாரணை முன்னெ டுத்துச் செல்லப்படுகின்றது.

No comments

Powered by Blogger.