Header Ads



அவசரமாக கூடவுள்ள யானைகள்

பாரா­ளு­மன்­றத்தில் 6 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்ள சர்ச்­சைக்­கு­ரிய இரண்டு விசா­ரணை அறிக்­கைகள் மீதான விவாதம் மற்றும் மாரப்­பன அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­ய­தா­னங்கள் குறித்து ஆராய்­வ­தற்­காக ஐக்­கிய தேசிய கட்­சியின் மத்­திய செயற்­குழு நாளை வெள்­ளிக்­கி­ழமை அவ­ச­ர­மாக கூடு­கி­றது. 

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கூட­வுள்ள மத்­திய செயற்­கு­ழுவில் முக்­கிய தீர்­மா­னங்கள் எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தாகவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  

இது குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, 

உள்­ளூ­ராட்சி தேர்­த­லுக்கு முன்­ன­தாக எதிர்­வரும் ஆறாம் திகதி நடை­பெ­ற­வி­ருக்கும் சர்ச்­சைக்­கு­ரிய பாரிய ஊழல் மோசடி மற்றும் பிணை­முறி தொடர்­பான ஜனா­தி­பதி விசா­ர­ணைக்­குழு அறிக்­கைகள் இரண்டு தொடர்­பான பாரா­ளு­மன்ற விவா­தத்தில் ஐ.தே.க. எவ்­வ­கை­யான  விட­யங்­களை பேசு­வது என்­பது தொடர்­பா­கவும் இதன்­போதும்  கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது. 

அதன்­போது ஐ.தே.க.வின் உப தலைவர் பத­வி­யி­லுள்ள ரவி கரு­ணா­நா­யக்­கவை  தற்­கா­லி­க­மாக நீக்க வேண்­டு­மென திலக் மாரப்­ப­னவின் தலை­மையின் கீழ் அமைக்­கப்­பட்ட குழு  முன்­மொ­ழிந்­துள்ள  நிலையில்   அது தொடர்­பா­கவும் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. 

மேலும் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 10 ஆம் திகதி நடக்­க­வி­ருக்கும் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலின் போது கொழும்பு மாவட்­டத்­துக்கு பொறுப்­பா­க­வி­ருக்கும் ரவி கரு­ணா­நா­யக்­கவை ஐக்­கிய தேசிய கட்­சியின் உப­த­லைவர் பத­வி­யி­லி­ருந்து இவ்­வாறு தற்­கா­லி­க­மாக நீக்­கு­வ­தென்­பது கொழும்பு மாவட்ட உள்­ளூ­ராட்சி சபை வாக்­கா­ளர்கள் மத்­தியில் சில குழப்­ப­க­ர­மான சூழலை ஏற்­ப­டுத்தும் நிலை காணப்­ப­டு­வதால் இது தொடர்­பாக இக்­குழுக் கூட்­டத்தில் பாரிய கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அந்தவகையில் இந்த இரண்டு அறிக்கைகள் மற்றும் திலக் மாரப்பன குழுவினால் முன்மொழியப்பட்ட யோசனைகள்  தொடர் பாக   செயற்குழுக் கூட்டத்தின்போது ஆரா யப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.