Header Ads



என்னை முறைத்துப், பார்த்த மஹிந்த


ஊழல் அரசியல்வாதிகள் ஒரே கூட்டமைப்பாக ஒன்றிணைந்துள்ளமையால் நாட்டின் அபிவிருத்திக்கு ஏற்படும் இடையூறு தொடர்பில் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலேயே அவர் இதனைக் கூறினார்.

பொலன்னறுவை – செவனப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

அரசியல்வாதிகளில் 30 அல்லது 40 வீதமானவர்கள் திருடுகின்றனர். அவர்கள் மக்களுக்கு சேவையாற்ற அரசியலுக்கு வரவில்லை. 

கடந்த ஆட்சிக்காலத்தில் எனக்கு சுகாதார அமைச்சர் பதவி கிடைத்ததன் பின்னர், மத்திய வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்தேன். இதன்போது அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பில் அமைச்சர்கள் கருத்து வௌியிட்டனர். மறுநாள் காலை முன்னாள் ஜனாதிபதி என்னை அலரி மாளிகைக்கு வருமாறு அழைத்தார். என்னை முறைத்துப் பார்த்த முன்னாள் ஜனாதிபதி, நீங்கள் கட்சியின் செயலாளர் அத்துடன் அமைச்சராகவும் உள்ளீர்கள். எவ்வாறு அரசாங்கத்தில் ஊழல் மோசடி என்று பேசுவீர்கள் என கேட்டார். கட்சியின் செயலாளருக்கும் அமைச்சருக்கும் ஊழல் மோசடிகள் தொடர்பில் பேச முடியாது என்று கூறினார். வேறொரு பயணத்தை முன்னெடுக்கவா தயாராகின்றீர்கள் என்று கேட்டார். அன்று நான் ஒரு தீர்மானத்திற்கு வந்தேன். ஊழல் மோசடிகளுக்கு எதிராகப் பேச முடியாமல் இருந்தால், வேறொரு பயணம் செல்ல வேண்டும் என தீர்மானித்தேன்.

1 comment:

  1. Have you taken any action aginst those wrongdoers. No. What is the message you are passing to the masses.

    ReplyDelete

Powered by Blogger.