Header Ads



வசீம் பயன்படுத்திய கணிணிகள், தொடர்பாக அறிக்கை


படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் வசீம் தாஜூதீன் பயன்படுத்திய கணிணிகள் தொடர்பாக தடயவியல் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

வசீம் தாஜூதீன் படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்றைய -28- தினம் கொழும்பு மேலதிக நீதவான் நீதிபதி சாந்தனி டயஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிமன்றத்துக்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்த குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிசார் வசீம் தாஜூதீன் இரண்டு மடிக்கணிணிகள் மற்றும் ஒரு டெஸ்க்டொப் கம்பியூட்டரை பயன்படுத்தியதாகவும் , அவற்றில் அடங்கியுள்ள தகவல்கள் குறித்து தடயவியல் அறிக்கை பெற்றுக் கொள்ள உத்தரவிடுமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் குறித்த கணிணிகள் தொடர்பான தடயவியல் அறிக்கையை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

இன்றைய வழக்கு விசாரணையின் போது இந்த வழக்கு தொடர்பாக கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணை வழங்கப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவும் சமுகமளித்திருந்தார்.

No comments

Powered by Blogger.