Header Ads



டக்ளஸுக்கு தூதனுப்பிய சுமந்திரன், ஆனல்டுக்கு மேயர் பதவியா..? தொடருகிறது இழுபறி

-F/S-

யாழ் மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு ஈ.பி.டி.பி கட்சியிடம் இரகசியமாக தூது அனுப்பியுள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பு. கூட்டமைப்பின் பேச்சாளரே இந்த இரகசிய பேரத்தில் இறங்கியுள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு சந்தர்ப்பம் வழங்காமல், இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்கலாமென பேசப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆட்சியமைக்க உரிமைகோரும்போது, ஈ.பி.டி.பி வெளியிலிருந்து ஆதரவளிக்க வேண்டுமென்றே கோரப்பட்டுள்ளது.

யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய ஆனல்ட், தற்போது முதல்வர் பதவி கிடைக்குமா என்ற அபாயத்தை சந்தித்துவரும் நிலையில், அவருக்காக இந்த பேரம் ஆரம்பிக்கப்பட்டிருக்கலாமென தெரிகிறது.

2

நல்லூர் பிரதேசசபையின் இறுதி தேர்தல் முடிவின்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு 06 ஆசனங்களை பெற்றுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி 05 ஆசனங்களை பெற்றுள்ளது. ஈ.பி.டி.பி 04 ஆசனங்களை பெற்றுள்ளது. ஐங்கரநேசனின் ஆதரவுடன் களமிறங்கிய சுயேச்சைக்குழு 02 ஆசனங்களை பெற்றுள்ளது. ஐ.தேக, சு.க, த.வி.கூ தலா ஒவ்வொரு ஆசனங்களை பெற்றுள்ளன.

இதன்படி, ஆட்சியமைப்பதற்கு ஐங்கரநேசனின் சுயேச்சைக்குழுவின் ஆதரவு தேவையென்ற நிலையேற்பட்டதையடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் சுயேச்சைக்குழுவுடன் இன்று காலையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதன்படி அந்த பிரதேசசபையில் யார் ஆட்சியமைப்பதென்பதை தீர்மானிக்கும் சக்தியாக சுயேச்சை அணி உருவெடுத்துள்ளது.

3

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை முதல்வர் யார் என மல்லுக்கட்டிய ஆனல்ட், சிறில் ஆகிய இருவரும் மயிரிழையிலேயே வெற்றிபெற்றுள்ளனர். சுமார் 50 வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றுள்ளனர்.

இதேவேளை யார் அடுத்த மாநகரசபை முதல்வர் என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. எந்த கட்சியும் தெளிவான பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையேற்பட்டால், சபையில் வாக்கெடுப்பின் அடிப்படையில் முதல்வர் தீர்மானிக்கப்பட வேண்டும்.

இதையடுத்து, அடுத்த முதல்வர் பதவியை பெற கட்சிகளிடம் ஆதரவைப்பெற ஆனல்ட், சிறில் ஆகிய இருவரும் மற்றைய கட்சிகளுடன் பேச்சை ஆரம்பித்துள்ளனர். ஆனல்ட் தரப்பு ஈ.பி.டி.பி, ஐ.தே.கவுடன் பேச்சை நடத்தியுள்ளனர். சிறில் தரப்பு ஈ.பி.டி.பி, தமிழ் தேசிய பேரவையுடன் பேச்சு நடத்தியுள்ளனர். எனினும் தெளிவான முடிவுகள் எட்டப்படவில்லை.

No comments

Powered by Blogger.