Header Ads



மனதளவில் என் கிரிக்கெட், வாழ்க்கை முடிந்தது - மலிங்கா


இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. தனது நேர்த்தியான யார்க்கர் பந்து வீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தவர். சிறப்பாக பந்து வீசிய மலிங்கா இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர். 34 வயதாகும் இவருக்கு தற்போது இலங்கை அணியில் தொடர்ச்சியாக இடம் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு எதிராக விளையாடிய பின்னர், சர்வதேச போட்டியில் பங்கேற்கவில்லை.

சமீபத்தில் ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி மலிங்காவை ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மலிங்காவை மும்பை உள்பட எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி மலிங்காவை ஆலோசகராக நியமித்துள்ளது. இதனால் மனதளவில் தன்னுடைய கிரிக்கெட் முடிவுக்கு வந்ததாக மலிங்கா கூறியுள்ளார்.

இதுகுறித்து மலிங்கா கூறுகையில் ‘‘மனதளவில் என்னுடைய கிரிக்கெட் ஆட்டம் முடிவுக்கு வந்து விட்டது. நான் இனிமேல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவேன் என்று நினைக்கவில்லை. என்னுடைய சர்வதேச கிரிக்கெட் ஓய்வு குறித்து விரைவில் அறிவிக்க திட்டமிட்டு வருகிறேன்.

நான் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் பேசவில்லை. ஆனால், நான் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவேன் என்றால், என்னுடைய உடல் எப்படி ஒத்துழைக்கிறது என்பதை பார்க்க வேண்டும். தற்போது என்னுடைய ஐபிஎல் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியுடன் புதிய சேப்டரை தொடங்கியுள்ளேன்’’ என்றார்.

1 comment:

  1. பணத்திற்காக நாட்டை காட்டிக்கொடுக்கும் வீரர்களின் நிலமை இவ்வாறு தான் அமையும்... அவர்களின் தேவை முடிந்த பின் தூக்கி வீசி விட்டார்கள்...

    ReplyDelete

Powered by Blogger.