Header Ads



செவ்வாய்க்கிழமை அமைச்சரவை மாற்றம்..?

-Tm-

நல்லாட்சி அரசாங்கத்தின் அடுத்த அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறலாம் என நம்பத்தகுந்த வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றது.  

அவ்வாறான மாற்றம் இடம்பெறுமாயின் அது, இந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் மேற்கொள்ளவிருக்கின்ற மூன்றாவது அமைச்சரவை மாற்றமாகும்.   

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின், முழுமையான கண்காணிப்பின் கீழே இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படவிருக்கின்றது. அது தொடர்பிலான பேச்சுவார்த்தை நேற்று (15) இடம்பெற்றதாக தகவல் தெரிவிக்கின்றது.   
அதுமட்டுமன்றி, ஐக்கிய ​தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரமே இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படவிருப்பதாக அறியமுடிகின்றது.   

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அரைவாசி நிறைவடைந்ததும், அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்கெனவே தீர்மானித்திருந்தனர். அதனடிப்படையிலேயே இந்த மாற்றங்கள் முன்னெடுக்கப்படவிருப்பதாக அந்தத் தகவல் தெரிவிக்கின்றது.   

இரு கட்சிகளுக்கும் இடையிலான அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், தேசிய மட்டத்தில் அமைச்சுகளை பகிர்ந்துகொள்வதற்கான, விடயதானங்களுக்கு அமையவே, இந்த அமைச்சரவை மாற்றம் மிகவும் சிறியதாக இடம்பெறக்கூடுமென, உள்ளக தகவல் தெரிவிக்கின்றது. 

No comments

Powered by Blogger.