February 06, 2018

நிர்வாணமாக சவுதிக்கு, சென்றால் என்ன..? கீர்த்தி தென்னகோன்

முஸ்லிம் பெண்களுக்கு வாக்களிக்வேண்டாம் எனும் சதித்திட்டத்தை முறியடிப்பது முஸ்லிம் சமூகத்தின் கடமையாகும்

முஸ்லிம் பெண்களுக்கு வாக்களிக்க வேண்டாம் ! எனும் கோஷத்துடன் முஸ்லிம் மதத்தலைவர்; ஒருவர்  இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார். தேசிய ஊடகங்கள் இவரது முன்னகர்வுக்கு எந்தவித அனுசரனையும் வழங்கவில்லை.இவரது இத்தகைய செயல்பாடுகளால் தமது சமூகத்திற்கும் மதத்திற்கும் பாரிய பாதிப்பு ஏற்படுகிறது என்பதை முஸ்லிம் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக தொகுதி மட்டத்தில் பெண்கள் 10 வீத பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ளனர். அதே வேளை தேர்தல் வேட்பாளர்களில் 25 முதல் 35 வீதத்தினரும் பெண்களாவர். முஸ்லிம் பெண்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறும்பொழுது, ஆரம்பத்திலேயே 10 வீத தோல்வியுடன் ஆரம்பிப்பது போன்ற தோற்றப்பாடே ஏற்படுகிறது.

இதனை தெளிவாக கூறுவதாயின், அணிக்கு 4 பேர் கொண்ட விளையாட்டுக்குழுவினர் ஒரு போட்டியில் கலந்துகொள்ளும்போது, பெண்கள் அணியில் 3 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பர். அதனால் தோல்வியை தழுவ ஏற்படும்.கூடுதலான அங்கத்தவர்களை கொண்ட அணியாக களமிறங்கும்போதே தேர்தலில் வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும்.

மதத்தலைவர்களுக்கு 'கலாசாரம்' மற்றும் 'சட்டம்' ஆகியவற்றை சரியாக புரிந்துகொள்வதற்கான அற்றல் இருத்தல் வேண்டும்.இலங்கையில் சட்டத்திற்கு மேலாக கலாசாரத்தை பேண முடியாது.இலங்கையில் அமுலில் உள்ள சட்டத்தின்படி உள்ளுராட்சி மன்றங்களில் 25 வீதம் பெண்களை முதன்மையாக கொண்ட நிறுவனங்களாக அமையவுள்ளன. பெண்கள் மட்டும் உள்ள உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்கலாம், ஆனால் ஆண்கள் மட்டும் உள்ள நிறுவனங்களை உருவாக்க முடியாது!

கடந்த காலத்திற்கு செல்வோம்

இலங்கைக்கு முதன் முதலில் முஸ்லிம்கள் வருகைதரும்போது இந்த நாட்டை ஒரு மகாராணியே ஆண்டு வந்தார்.அந்த பெண்ணின் மேல் உடல் பகுதி நிர்வாணமாக இருந்தது. முஸ்லிம்கள் இலங்கைக்கு வருகைதரும் வரை, இத்தகைய அரை நிர்வாணமான பெண்ணை கண்டதில்லை. ஆனால்,இத்தகைய அரை நிர்வாணம் உள்ள இலங்கை பெண்கள் படகு மூலம் சவுதி அரேபியாவுக்கு சென்றால் என்ன நடந்திருக்கும் ? 

இரண்டாவதாக,படகு மூலம் வந்த முஸ்லிம்களை மணம் முடித்து வாழ்வதற்கு,உண்ணுவதற்கு, உடல் உறவு வைத்துக்கொள்வதற்கு, குடும்பம் நடத்துவதற்கு,பிள்ளைகளை உருவாக்குவதற்கு இலங்கைவாழ் பெண்கள் அச்சங்கொள்ளவில்லை. அவர்கள் துணிச்சல்மிக்கவர்களாக இருந்தனர். அதனாலேயே இலங்கையில் முஸ்லிம் சமூகம் உருவாகியது. இலங்கை பெண்கள் வெளிநாட்டு பிரஜைகளிடத்தில் அச்சம் கொள்ளாமல்,அவர்களுடன் இணைந்து குடும்பமாக வாழ்ந்த சமூகமாகும்.அத்தகைய துணிச்சல்மிக்க பெண்களாக இன்று எமது நாட்டு முஸ்லிம் பெண்கள் இல்லை.!!

புரம்பரை மற்றும் தலைமுறை மூலமே கலாசாரம் உருவாகிறது.தாய்,தந்தை மூலம் கிடைக்கிறது.கலாசாரம் என்பது பெண்களால் மட்டும் கிடைக்கப்பெறும் ஒரு பண்பல்ல.

இலங்கையில் முஸ்லிம் சமூகம் பெற்றுக்கொள்ளும் தேசிய பாரம்பரிய உரிமையானது தந்தைவழி உரிமை மட்டுமே என ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு,உந்துதல்,கட்டாயப்படுத்தும் செயல்பாடு ஒரு கலாசாரம் அல்ல.அரைவாசி கலாசாரத்தை பின்பற்றுவதும் ஒரு ஒழுங்கு முறையற்ற கலாசாரமே.

தேர்தலும் முஸ்லிம் பெண்களும்  சிங்கள,தமிழ்,கிறிஸ்தவ,பௌத்த,இந்து மற்றும் பறங்கி சமூகங்கள் மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்வர்.இம்முறை தேர்தலில் ஆயிரக்கணக்கானோர் தெரிவு செய்யப்படுவர்.முஸ்லிம் பெண்களுக்கு வாக்களிக்க வேண்டாம் எனும் செயல்பாட்டின் மூலம் ஏற்படப்போவது என்னவெனில்,வேறு இன,மத பெண்களை மட்டும் தெரிவு செய்யும் நிலை உருவாகிவிடும்.அதனால் இறுதியில் முஸ்லிம் சமூகத்திற்கே பெரும் பாதிப்பு ஏற்படும்.

பெண்களின் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வை பெற்றுதரக்கூடியவர்கள் பெண்கள் மட்டுமே.உதாரணமாக கர்ப்பிணி தாய்மாருக்கு,குழந்தை பராமரிக்கும் பெண்களுக்கு சிகிச்சை முகாம்கள்; அவசியம் (ஆடை மாற்ற தனிப்பட்ட அறைகள் ஒதுக்கப்படுகின்றன).இருப்பினும் கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் வாழும் இடங்களில் அவ்வாறு செல்லும் கர்ப்பிணத்தாய்மாருக்கு வேறு தனிப்பட்ட அறைகள் ஒதுக்கப்படுவதில்லை.அவ்வாறான அறைகளும் இல்லை.பெண்களின் பிரச்சினைகளுக்கு ஆண்களால் தீர்வு தர முடியாது.பெண்களின் பல பிரச்சினைகளுக்கு ஆண்களிடம் உரிய பதில்கள் இல்லை.எனவே முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்க முஸ்லிம் பெண்கள் உள்ளுராட்சி மன்றங்களில் பிரதிநிதிகளாக இருத்தல் வேண்டும்.

மறுபுறத்தில், நாம் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ,இலங்கையில் ஏனைய சமூகங்கள் ஊடாக தேர்தலில் 25வீத பெண்கள் தெரிவு செய்யப்படுவர்.அதனை தடுக்க எவராலும் முடியாது.முஸ்லிம் சமூகம் தமது பிரதேச பெண் வேட்பாளர்களுக்கு வாக்களிக்காவிட்டால் என்ன நடக்கும் ? உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும்.இலங்கையில் உள்ளுராட்சி மன்றங்களில் சிங்கள-தமிழ் பெண்கள் சுமார் 1500 பேர் இருக்கும்பொழுது,அதில் ஒரு முஸ்லிம் பெண் பிரதிநிதி இல்லாமல் இருப்பது,முஸ்லிம் சமூகத்திற்கே பாதிப்பாக அமையும்.

இதனால் முஸ்லிம் வேட்பாளர்கள் கொண்ட கட்சிகளில் உயர்ந்த பட்ச வாக்குகள் இல்லாமல் போய்விடும்.அதனால் தெரிவு செய்யப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடும்.மேலும் அந்த கட்சி குறிப்பிட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தோல்வி அடைந்துவிடும்.பெண்களை தெரிவு செய்யாது பெற்றுக்கொள்ளும் வாக்குகளினால் அந்த குழு தோல்வியை தழுவும்.

முஸ்லிம் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்வர்.வீட்டில் இருக்கும் ஆண்களுடன் உரையாடிவிட்டு திரும்புவர்.அவர்கள் முஸ்லிம் பெண்களை பார்ப்பதோ பேசுவதோ இல்லை.முஸ்லிம் வேட்பாளர் வீடு வீடாக செல்லும்போது,தம்முடன் ஒரு சிங்கள பெண் வேட்பாளரை அழைத்தவண்ணமே செல்வர் என்பதை நான் நன்கறிவேன்.அவர்கள் எனக்கு கூறினார்கள் ' எனக்கு முஸ்லிம் பெண்ணோடு பேச முடியாது.இருந்தபோதிலும் சிங்கள பெண் வேட்பாளர் வீட்டிற்குள் சென்று அந்த பெண்களோடு பேசிவிட்டு வருவார், என்று.முஸ்லிம் பெண்களின் வாக்குகள் இன்றி இம்முறை தேர்தலை வெல்லமுடியாது என்றும் கூறினர்.அரசியல் தலைவர்கள் இந்த கருத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.மாகாண சபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களின்போது முஸ்லிம் பெண்களின் வீடுகளுக்கு சென்று அவர்களது கைகளை தொட்டு பேசக்கூடிய பெண் பிரதிநிதி ஒருவரை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது என்பதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.அப்படி செய்யாவிட்டால், புதிய தேர்தல் முறையின் கீழ் எதிர்காலத்தில் அத்தகைய அரசியல் கட்சிகளுக்கு ஒரு இரப்பு இல்லாது போய்விடும்.

இம்முறை தேர்தல் கண்காணிப்பு கடமைகளில் ஈடுபடும் கபே அமைப்பு எதிர்கொண்ட அநீதியான செயல்பாடு என்னவெனில், 'முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் ! அவர்களை தோல்வியடைய செய்ய வேண்டும் !!' எனும் கருத்தாகும்.இத்தகைய எதிர்ப்பு கோஷங்களை முஸ்லிம் சமூகத்துக்குள் உள்ள குழுவிளால் மேற்கொள்ளப்படுவதனால், முஸ்லிம் சமூகத்திற்கே பெரும் பாதிப்பு ஏற்படும்.

தமது பெண்களை வெற்றி பெறச்செய்ய முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும்.அந்த வெற்றி, முழு முஸ்லிம் சமூகத்திற்கும் கிடைத்த வெற்றியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

கீர்த்தி தென்னகோன்
கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் 

6 கருத்துரைகள்:

100% true that you have mentioned about the first colognisation of muslims in East.

who is guy and just wondering why you publish this kind of unwanted articles . Also we giving priority to nunmuslims articles and not even think what Islam saying.

who is this guy? and just wondering why you publish this kind of unwanted articles . Also we giving priority to nunmuslims articles and not even think what Islam saying.

இந்த தென்னகோன் அவர்களுக்கு இஸ்லாமும், இஸ்லாமிய சட்டமும், இலங்கை முஸ்லிம்களின் கலாச்சாரமும் பண்பாடும், இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் சரியாக எடுத்துக் கூறப்பட வேண்டும். அதே நேரம் நல்லதொரு இஸ்லாமிய அறிஞ்சரால் இவர் முன்வைக்கும் பிரச்சினைக்கு சரியான பதிலளிக்கப்படுவதோடு, இது சம்பந்தமாக முஸ்லீம் மக்களும் சரியாக வழிநடத்தப்பட வேண்டும். இந்த விடயம் உடனடியாக கையாளப்பட வேண்டியது ஜம்மியத் உலமாசபையின் கடமையுமாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இந்த தென்னகோன் அவர்களுக்கு இஸ்லாமும், இஸ்லாமிய சட்டமும், இலங்கை முஸ்லிம்களின் கலாச்சாரமும் பண்பாடும், இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் சரியாக எடுத்துக் கூறப்பட வேண்டும். அதே நேரம் நல்லதொரு இஸ்லாமிய அறிஞ்சரால் இவர் முன்வைக்கும் பிரச்சினைக்கு சரியான பதிலளிக்கப்படுவதோடு, இது சம்பந்தமாக முஸ்லீம் மக்களும் சரியாக வழிநடத்தப்பட வேண்டும். இந்த விடயம் உடனடியாக கையாளப்பட வேண்டியது ஜம்மியத் உலமாசபையின் கடமையுமாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

Can't accept 100% in this article,some are
Not relevant

Post a Comment