Header Ads



'உலகளாவிய தீவிரவாதிகள்' பட்டியலில், இஸ்மாயில் ஹனியா


ஹமாஸ் இயக்கத்தின் சிரேஷ்ட அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, அமெரிக்காவின் "உலகளாவிய தீவிரவாதிகள்" (Global Terrorist) பட்டியலில் இணைத்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் (US State Department), ஹமாஸ் ஆயுதக் குழுவுடன் ஹனியா நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளதால் அவரை குறித்த பட்டியலில் இணைத்துள்ளதாக, அறிவித்துள்ளது.

குறித்த தடைக்கமைய, அமெரிக்காவுக்கு பயணம் செய்வதற்கான தடை மற்றும் அமெரிக்காவை மையமாகக் கொண்ட அவரது வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் சொத்துகள் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இத்தடையில் அமெரிக்கர்கள் அல்லது அமெரிக்க நிறுவனங்கள் அவருடன் எவ்வித வர்த்தக தொடர்பையும் மேற்கொள்ளவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் இயக்கமானது, இஸ்ரேலினால் கையகப்படுத்தியுள்ள காஷாவில் இயங்கி வருகின்றது. 1987 இல் ஆரம்பிக்கப்பட்ட இவ்வியக்கம், பலஸ்தீன நில அபகரிப்புக்கு எதிராக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

54 வயதான ஹனியா, கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் காலித் மெஷாலின் இடத்திற்கு ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக கடந்த டிசம்பர் 06 ஆம் திகதி, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்ததோடு, தனது தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலத்திற்கு மாற்றியிருந்தது. இதனையடுத்து, பலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேல் கையகப்படுத்தியிருந்த நகரங்களில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதோடு, அப்போராட்டம் உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளிலும் இடம்பெற்றது.

இதனையடுத்து கடந்த ஜனவரி 17 ஆம் திகதி, பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. உதவி நிறுவனத்தால் பலஸ்தீன அகதிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை, அமெரிக்க அரசாங்கம் அரைவாசிக்கும் அதிகமாக குறைத்தது. குறித்த நிறுவனத்தால் கடந்த 70 வருடங்களாக அகதிகளாக காணப்படும் 5 மில்லியனுக்கும் அதிகமான அகதிகளுக்கு உதவியளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் உருவானதிலிருந்து, 17 அமெரிக்கர்கள் பலியாவதற்கு அவ்வியக்கம் காரணமாக இருந்துள்ளதாக, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் ஹனியாவுக்கு தண்டனை வழங்க அமெரிக்கா தீட்டம் தீட்டுவதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டள்ளனர்.

3 comments:

  1. ஷைத்தான்தான் தன் சகாக்களைக் கொண்டும் இவ்வாறு பயமுறுத்துகிறான்; ஆகவே நீங்கள் அவர்களுக்குப் பயப்படாதீர்கள் - நீங்கள் முஃமின்களாகயிருப்பின் எனக்கே பயப்படுங்கள்.
    (அல்குர்ஆன் : 3:175)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. அமேரிக்கா இப்பொ செல்லாக்காசு.

    ReplyDelete

Powered by Blogger.