Header Ads



பேருவளை + ஜிந்தோட்ட அராஜகத்தைவிட, அம்பாறையில் வன்முறை அதிகம் - ஹரீஸ் வேதனை

(ஏ.ஏ.எம். அன்ஸிர்)

முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுபட்டு, முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான சவால்களை முறியடிக்காவிட்டால், நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு அபாயகரமான ஒரு நிலை உருவாகுமென பிரதியமைச்சர் ஹரீஸ் வேதனையுடன் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,

இதற்கு முன்னரும் முஸ்லிம்களுக்கு எதிராக பல வன்முறைகள் நடந்துள்ளன. அவற்றின்போதும் அங்கு சென்றுள்ளேன். அந்த வன்முறைகளுக்கும்  அம்பாறை வன்முறைக்கும் வித்தியாசமுள்ளது. அம்பாறை ஒரு பாதுகாப்பு வலயமிக்க பகுதி. ஒரு வன்முறை நடக்கிறதென்றால் அங்கு பாதுகாப்புப் படைகள் உடனடியாக வந்துகுவியும். ஆனால் அம்பாறையில் பாதுகாப்பு படை துரிதமாக செயற்படவில்லை.

எனது அனுபவத்தின் படி பேருவளை, ஜிந்தோட்ட சம்பவங்களைவிட அம்பாறையில் நடந்தது மிக மோசமானது.

அம்பாறையில் சிங்களவர் ஆவேசமாக செயற்பட்டனர். சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரம் தமக்கிருப்பதாக அவர்கள் கர்ஜித்தனர். அது மிக மோசமானது.

அம்பாறை மாவட்டம் அதிக முஸ்லிம்களை கொண்டது. அங்குள்ள முஸ்லிம்களுக்கு எதிராகவே இப்படி வன்முறையை நிகழ்த்த முடியுமென்றால் ஏனைய பகுதி முஸ்லிம்களின் நிலையை நாம் உணரமுடிகிறது.

3 comments:

  1. poohappoha purium nammawarhaqlukku, intha yahapalanayin vesham.

    ReplyDelete
  2. poohappoha purium nammawarhaqlukku, intha yahapalanayin vesham. Army,STF wanthu enna ? Muslimkalaya pathukapparkal? Avangalum sherdu ......, Nammawarhal innamum Police, Army, Navy, Airforce ,STF ,etc. shervathillai. Pirachinai varum pothu mattum nam Avarkalai kurai kooruwoom.Nam ella thuraikalilum irukkatha varai namakku vidivu illai.

    ReplyDelete
  3. முன்னைய அரசாங்கம் மாற்ற பட்டதன் காரணம் முஸ்லிம்களுக்கு அநியாயம் அவர்களால் திட்டமிடப்பட்டு நடத்தப்படடது என்று முஸ்லிம்கள் நம்பினதாலே, ஆனால் இந்த அரசாங்கம் பாராமுகம் காட்டுவதால் இப்போது எங்கும் வன்முறைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளது, முன்னர் ஒரு சாரார் நடத்தியது இப்போது பல சாராரால் நடத்த பட்டுக்கொண்டு இருக்கிறது, இதற்கு மஹிந்த அரசாங்கம் பரவாயில்லை போல் தோன்றுகிறது

    ReplyDelete

Powered by Blogger.