Header Ads



மாலைத் தீவில், அவசரநிலை பிரகடனம்


அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் மாலத் தீவு அரசு 15 நாட்கள் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.

இந்த அவசர நிலை அறிவிப்பானது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரங்களை தருவதோடு சந்தேகிக்கப்படும் நபர்களை கைது செய்யவும் உதவும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

மாலத் தீவு அரசானது நாடாளுமன்றத்தை இடைநீக்கம் செய்துள்ளதோடு அதிபர் அப்துல்லா யாமீனை பதவிநீக்கம் செய்ய உச்சநீதிமன்றம் எடுக்கும் எந்த முடிவையும் தடுக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக 12 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிநீக்கம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனால் அந்த 12 உறுப்பினர்களோடு எதிர் கட்சி பெரும்பான்மை பெரும் நிலை ஏற்பட்டது.

முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் மீதான விசாரணை அரசமைப்பு சட்டத்துக்கு புறம்பானது எனக் குறிப்பிட்டது உச்சநீதிமன்றம். வெள்ளிக்கிழமை வெளியான உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அமல்படுத்த உறுதிமொழி தந்த காவல்துறை ஆணையரை அரசு பதவி நீக்கம் செய்தது மேலும் மாலத் தீவுக்கு திரும்பிய இரண்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறை வைக்க உத்தரவிட்டுள்ளது.

எதிர்க்கட்சி எம்.பி இவா அப்துல்லா ஒரு அறிக்கையில் ''அவசர நிலை பிரகடனம் ஒரு நம்பிக்கையற்ற நடவடிக்கை மேலும் மக்கள் மற்றும் அமைப்பின் நம்பிக்கையை உட்பட அரசு அனைத்தையும் இழந்துவிட்டது'' எனக் கூறியுள்ளார்.

மாலத் தீவுகளில் முன்னதாக 2015 நவம்பர் மாதம் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.

No comments

Powered by Blogger.