Header Ads



"ரணிலை நீக்கமுடியாது, மைத்திரியிடம் அந்த அதிகாரம் இல்லை"

19 அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும், பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன கூறினார் 

நேற்று இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் கூறினார். இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, 

1978ம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசியலமைப்பில், கடிதம் ஒன்றை அனுப்பி பிரதமரை பதவி விலக்குவதற்கான அதிகாரம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு இருந்தது. எனினும் 19வது திருத்த சட்டத்தின் படி அந்த அதிகாரம் இல்லை. 

அந்த அதிகாரம் இருப்பது பிரதமரிடமே. அவர் தான் தனது பதவி விலகல் கடிதத்தை வழங்க வேண்டும். இது தான் பிரதமர் ஒருவரை மாற்றுவதற்கு 19வது திருத்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறையாகும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.