Header Ads



குழுக்களை நியமித்த ரணில் - ஆத்திரமடைந்த அஜித், மாகாண தேர்தலிலும் தோல்விதான் என்கிறார்

ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்­குள்ளும்  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு  எதி­ரான நிலைப்­பாடு மேலோங்­கி­வ­ரு­வ­தாக தெரி­கின்­றது. பெரு­ம­ள­வானோர் அவ­ருக்கு ஆத­ர­வாக இருக்­கின்­ற­போ­திலும்  சில தரப்­பினர்  ஐக்­கிய தேசி­யக்­ கட்­சிக்குள் மாற்றம் ஏற்­ப­ட­வேண்­டு­மென்று கோரி வரு­கின்­றனர்.  ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலை­மையில் மாற்றம்  ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து அவர்கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். 

பிர­தமர் ரணில் விக்­கி­ர­மசிங்க தலை­மையில் நேற்று  அல­ரி­மா­ளி­கையில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி   அமைச்­சர்­க­ளு­டனான சந்­திப்பு இடம்­பெற்­றது. இந்த சந்­திப்­பின்­போது  பல்­வேறு விட­யங்கள் குறித்து ஆராயப்­பட்டு  பல குழுக்­களும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன.இந்தக் குழுக்கள் நியமனம் தொடர்பில்    பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். குழுக்களை அமைப்பதன் மூலம் அரசாங்கத்தை முன்கொண்டு செல்ல முடியாது. அரசாங்கத்தை முன்கொண்டு செல்லவேண்டுமானால் கட்சிக்குள் மாற்றங்களை செய்யவேண்டும். குழுக்களை அமைத்து நேரத்தை கடத்த கூடாது என்று அதிருப்தி தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலை தொடர்ந்தால் அடுத்த மாகாணசபைத் தேர்தலில் தோல்வி அடையவேண்டிய நிலை ஏற்படும் என்றும்   அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

No comments

Powered by Blogger.