Header Ads



அம்பாறை ஹர்த்தால் கைவிடப்பட்டது

(எஸ் .எல். அப்துல் அஸீஸ்)

அம்பாறை மாவட்ட முஸ்லிம் சமூக ஒன்றியம் எனும் பெயரிலான அமைப்பு அம்பாறை மாவட்டத்தில்   நாளை வியாழக்கிழமை ஹர்த்தாலுக்காக அழைப்பு விடுத்திருந்த போதும்  அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினதும்,  அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமாவினதும் வேண்டுகோளுக்கு இனங்க  குறிப்பிட்ட  ஹார்த்தலுக்கான அழைப்பு கைவிடப்பட்டது.

கடந்த திங்கள் இரவு  அம்பாறை நகரில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் மற்றும் கடைகள், வாகனம்கள் சேதப்படுத்தி  தீயிடப்பட்டமை, அங்குள்ள மக்கள் தாக்கப்பட்டமை போன்ற விடயங்களை கண்டித்தே இந்த ஹர்த்தால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. 

ஆயினும் இந்த விடயம்கள் தொடர்பாக இன்று மாலை நிந்தவூரில் கூடிய அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினதும், அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமாவினதும் நிர்வாகிகள், எதிர்வரும் சில தினம்களில் மேற்கொள்ளவுள்ள இவ் விடயம்கள் தொடர்பான வேலைத்திட்டம்காளை கருத்திற்கொண்டு நாளை  ஹார்த்தால் அனுஷ்டிப்பது இல்லை எனவும், நாளைய தினத்தில் மக்கள்  அனைவரும் துவா பிராத்தனைகளில் ஈடுபடுமாறு வேண்டுவது எனவும்  முடிவு செய்யப்பட்டது. 

இதே வேலை எதிர்வரும் சனிக்கிழமை அம்பாறைக்கு வருகைதரவுள்ள பிரதமரை  அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினதும்,  அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமாவினதும் நிர்வாகிகள் சந்த்து இவ்விடயம் சம்பந்தமாக கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளனர்.   

1 comment:

Powered by Blogger.