Header Ads



"எல்லைப் பிரதேச முஸ்லிம்களின், பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்" - பிரதமரிடம் வலியுறுத்து

எல்லைப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் இம்ரான் எம்.பி
எல்லைப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார். அம்பாறையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சொத்துக்களுக்கும் பள்ளிவாயளுக்கும் இனவாதிகளால் சேதம் விளைவிக்கப்பட்டது தொடர்பாக இன்று புதன்கிழமை காலை பிரதமரை நேரடியாக சந்தித்து முறையிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,’

மூவின மக்களின் சகவாழ்வை உறுதிபதுத்துவதாக கூறி ஆட்சிபீடம் ஏறிய இந்த அரசாங்கம் கடந்த அரசாங்கத்தை போன்றே இனவாதிகளை கட்டுபடுத்துவதில் இதுவரை  தோல்வி கண்டுள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

அம்பாறையில் ஏற்பட்ட சம்பவம் போன்று எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதை புதிதாக சட்டம் ஒழுங்கு அமைச்சராக கடமை ஏற்றுள்ள நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் இந்த சம்பவங்களின் மூலம் அரசியல் லாபாமடைய பலர் முயற்சி செய்து இனவாத பிரச்சாரத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதால் எல்லைப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பை  உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறான இனவாத செயற்பாடுகள் தொடருமாயின் உள்ளூராட்சி தேர்தலுக்கு பின் பாரிய அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கிவரும் நல்லாட்சி அரசுக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து இவ்வகையான செயற்பாடுகளை கட்டுபடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசு உடன் ஆரம்பிக்க வேண்டும்.

அத்துடன் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இனம்கண்டு உடனடியாக அவர்களுக்கு’ எதிராகசட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என பிரதமரிடம் முறையிட்டதோடு உரிய நடவடிக்கைகளுக்காக வேண்டி இது தொடர்பான ஆவணங்களும் பிரதமரிடம் சமர்பிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.