Header Ads



நாளை புதிய அரசாங்கமும், அமைச்சரவையும் பதவியேற்பு..??


D/C

ஐக்கிய தேசிய கட்சி அமைக்கும் தனி அரசாங்கத்தின் அமைச்சரவை நாளையத்தினம் (14) சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

புதிய அமைச்சரவையின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பில் தற்போழுது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதற்க்கமைய ஐக்கிய தேசிய கட்சி சார்பில் தற்பொழுதுள்ள அமைச்சர்களின்அமைச்சுகளிலும் மாற்றங்கள் ஏற்படவுள்ளது.

சில அமைச்சர்களுக்கு தற்பொழுதுள்ள அமைச்சுகளின் பொறுப்புகளுக்கு மேலதிகமாகவும் பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இணையும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

No comments

Powered by Blogger.