Header Ads



கட்சி வாதத்திற்கு அப்பால், செயற்பட வேண்டுகோள்

எம்மவருக்காக எல்லை நிர்ணயக்குழுவின் காத்திரமான பங்கு வகித்தும் உரிய பலனின்று போகும் தருவாயில் தன்னால் ஆன முயற்சிகளை செய்த போதும் தனது சார்பான முன்வைப்புக்களை வைத்த கலாநிதி ஹஸ்புல்லா சேரை நினைவுபடுத்துவதுடன் எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பணிவான பகிரங்க வேண்டுகோள் மக்கள் சார்பாக முன்வைக்க வேண்டிய தருணமாகும்.

கடந்த காலத்தைப்போல் மௌனிகளாகவும் நிபந்தனையின்றி ஆதரவு வழங்கியமாதிரியும முஸ்லீம்களின் சமகால அரசியல் யதார்த்தத்தின் இருப்பு நிலையின் பற்றிபாதகநிலையின் தன்மை அறியாமல்  வாக்களித்த வரலாற்றுத்தவற்றை இம்முறையும் சேரம் போகாமல் வாக்களித்த எம்சமுதாய நலனுக்காக செயல்படுங்கள்.

தற்போதைய மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையில் முஸ்லீம்களின் இருப்பு பாரிய அளவில் இல்லாமல் போகும் படியாகவே பரிந்துறைகள் அமைந்துள்ளதாக அறிகின்றோம் .இதில் தென்பகுதியில் இருப்புக்கள் வெகுவாக குறையும் நிலையும் ,கிழக்கில் புதிய வடிவிலான பிரச்சினைகளை தோற்றுவிக்கும் நிலையும் ஏனைய பகுதிகளில் குறையும் நிலையும்  ஆக ஒட்டு மொத்தத்தில் முஸ்லீம்களின் இருப்புக்களில் பாரிய அளவு பாதிப்புக்களை தோற்றுவிக்கப்படவுள்ளது.

எனவே இப்பரிந்துரைகள் இன்னும் இருவாரகால அவகாசத்தில்பாராளுமன்றில் முன்வைத்து பாராளு மன்றத்தில் மூன்றில் இரண்டு அனுமதி வந்தால் இவ்விடயம் சட்டத்திற்கு வரலாம்.

எனவே  உடனடியாக கட்சிபேதமின்றி செயற்பட்டு எதிர்கால எமது சந்ததிகளின் இருப்புக்காக எம்மை அர்பணிகக வேண்டிய தருணம் இது.

.இன்ஷா அல்லாஹ் நல்ல முடிவுகளைப் பெற ஒன்றுபடுங்கள். களமிறங்குங்கள் செயல்படுங்கள்.    

புத்தளவாழ் யாழ் கிளிநொச்சி சிவில் அமைப்பு ஒன்றியம்.

தலைவர் அப்துல் மலிக் மௌலவி செ
யலாளர் ஹஸன் பைறூஸ்

No comments

Powered by Blogger.