Header Ads



'ஜனாதிபதியின் முகத்திற்கு நேராக, ரணில் கூறியது'


நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றினால் மாத்திரமே, தாம் பிரதமர் பதவியை விட்டு வெளியேறுவேன் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நேற்றுமாலை சபாநாயகர் கரு ஜெயசூரிய, ஐதேக பொதுச்செயலர் கபீர் காசிம் ஆகியோருடன் இணைந்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்திருந்தார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

இந்தச் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட ரணில் விக்கிரமசிங்க, ஐதேக தனக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், தமது கட்சி நாடாளுமன்றத்தில் அதிகபட்ச ஆசனங்களைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய நிலையில், நம்பிக்கையில்லாப் பிரேரைணை ஒன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றாமல், பிரதமர் பதவியை விட்டு கீழ் இறங்குவதற்கு எந்தக் தேவையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து, ரணில் விக்கிரமசிங்க பதவியை விட்டு தாமாக விலகப் போவதில்லை என்பது தெளிவாகியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.