Header Ads



தற்காலிக அரசின் தலைவராக, சமால் ராஜபக்ஸவை நியமிக்க வேண்டும் - வாசுதேவ

தற்காலிக அரசொன்றை உருவாக்குமாறு ஒருங்கிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்றை உடனடியாக கலைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்றை கலைப்பது குறித்து ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான தரப்புக்களுடன் இணைந்து நாடாளுமன்றை கலைத்து தேர்தல் நடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தற்காலிக அரசின் தலைவராக சமால் ராஜபக்ஸவை நியமிக்க வேண்டுமென தாங்கள் பரிந்துரை செய்வதாக சட்ட ரீதியாக இந்த அரசை பதவி விலக்க முடியாது என்ற போதிலும், தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க மக்கள் ஆணை வழங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2 comments:

  1. Ada poda neeyum un niyaayamum...
    This govern will be until 2020... dont dream

    ReplyDelete
  2. இந்த பைத்தியக்காரன் கிழவன் இன்னும் அரசியில் இருந்து ஓய்வு இல்லையா !!

    ReplyDelete

Powered by Blogger.