Header Ads



இலங்கை வரலாற்றில் இதுவே அமைதியான தேர்தல்..?

2018ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி தேர்தல் இலங்கையின் வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் அமைதியான தேர்தலாக அமையக் கூடுமென தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

52 ஆயிரத்திற்கு மேற்பட்ட வேட்பாளர்களுடன் இலங்கையின் வரலாற்றில் மிகப் பெரிய தேர்தலாக உள்ளூராட்சிமன்ற தேர்தல் அமைந்திருந்த போதிலும், தேர்தல் பிரச்சார காலம் முழுவதும் அமைதி நிலை பேணப்பட்டதாக கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு, பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின் சேவைகளை தென்னக்கோன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வாக்களிப்புக்கு முந்திய காலப்பகுதியில் அமைதிச் சூழல் பேணப்பட்டதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.

தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் நாடு முழுவதிலும் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்தியுள்ளன.

கபே அமைப்பின் 50 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பப்ரல் நிறுவனமும் நன்கு பயிற்றப்பட்ட ஏழாயிரம் பேரை கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளது.

தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.