Header Ads



கவிழ்க்கப்படுவாரா ரணில்..? யானைகளிடமிருந்து தகவல் பெறும் மைத்திரி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் அது விவாதத்திற்கு எடுக்கப்படும் வரை அடுத்த அமைச்சரவை மாற்றத்தை செய்வதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருக்கின்றார் என்று ஜனாதிபதியுடன் தொடர்புடைய உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன என்று கொழும்பு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில்,

பிரதமருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனக் கூறப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை சபையில் எப்போது விவாதத்துக்கு எடுக்கப்படும்? அது நிறைவேறுமா? இல்லையா? என்பது குறித்து தெளிவான ஒரு முடிவு கிடைக்கும் வரை

முழுமையான அமைச்சரவை மாற்றம் இடம்பெறாது எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

ஏற்கனவே நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது புறக்கணிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியம் வாய்ந்த உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர திரைமறைவில் முயற்சிகளை எடுத்து

வருகின்றனர்.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் நேற்றிரவு இரகசிய மந்திராலோசனையும் இடம்பெற்றுள்ளது. இதில் எம்பிக்கள் பலர் கலந்துகொண்டனர்.

அதேசமயம் ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்கள் நேரடியாக ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு கட்சிக்குள் இடம்பெறும் பாரபட்சங்கள் குறித்து அவரிடம் கூறிவருவதாகவும் தெரியவருகின்றது.

எவ்வாறாயினும் பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் நிதானமாக நோக்கி அதன் விளைவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நகர்வுகளை செய்ய ஜனாதிபதி உத்தேசித்திருக்கின்றார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

1 comment:

Powered by Blogger.