Header Ads



பள்ளிவாசலை உடைத்தது ஏன்..? அம்பாறையில் அமைச்சர் ரிஷாட் கேள்வி!

-சுஐப் எம்.காசிம்-

அம்பாறை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலை உடைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லாத நிலையிலும், எதுவிதக் காரணங்களுமின்றி வேண்டுமென்று நன்கு திட்டமிட்டு இந்தப் பள்ளியை இனவாதிகள் உடைத்து தகர்த்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

விமானப் படைக்குச் சொந்தமான விஷேட விமானம் மூலம் அம்பாறைக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் தலைமையிலான குழு தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல், கடைகள் மற்றும் தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்கள் ஆகியவற்றை பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பில் பள்ளி தர்மகர்த்தாக்களிடமும், ஊர்ப்பிரமுகர்களிடமும் விபரங்களைக் கேட்டறிந்துகொண்டதுடன், அங்கு வருகை தந்திருந்த போலிஸ் உயரதிகாரிகளிடம் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

பள்ளிவாசலில் இருந்து சில மீற்றர் தொலைவுக்கு அப்பால் அமைந்திருந்த ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற சர்ச்சையை அடுத்து, நூற்றுக்கணக்கானோர் வேண்டுமென்றே இந்தப் பள்ளிவாசலுக்கு வந்து தாக்குதல் நடத்தியதன் காரணம் என்ன? இதன் பின்னணிதான் என்ன? என்று அமைச்சர் ரிஷாட், பொலிஸ் அதிகாரிகளிடம் வினவினார். 

இந்த நாசாகார செயலைப் புரிந்தவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்றும், இலங்கை புலனாய்வுத்துறை இவர்களை கண்டுபிடிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட ஹோட்டல் உரிமையாளர்களும், பள்ளிவாசல் காவலாளியும், அன்று நள்ளிரவு நடந்த துகில் சம்பவங்களையும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அமைச்சரிடம் விபரித்தனர். 

பதற்ற சூழ்நிலையில் வாழும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களை பொறுமை காக்குமாறு கூறிய அமைச்சர், அவர்களை ஆசுவாசப்படுத்தியதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.  

இதன்போது, பிரதி அமைச்சர் அமீர் அலி, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.ரீ.ஹசன் அலி மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான எஸ்.எஸ்.பி மஜீத், நௌஷாட், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் அமைச்சருடன் சென்றிருந்தனர். அத்துடன் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான வேதாந்தி சேகு இஸ்ஸதீன், அன்சில், தாகிர், ஜவாத் ஆகியோரும் அங்கு வருகை தந்திருந்தனர்.




1 comment:

  1. அம்பாரை மாவட்டத்தில் 61%மக்கள்
    தமிழ் பேசும்மக்களாகும் அரச, கூட்டுத்தாபன, திணைக்களங்களின் மாவட்டக் காரியாலயங்கள் அநேகமானவை
    அம்பாரை நகரிலே இருக்கின்றன.
    கச்சேரி உட்பட , கடந்த பத்து வருடங்களுக்கு முன் இக்காரியாலயங்களில் அநேகமானவற்றின் தலைமை பொறுப்பில் தமிழ் பேசும் அதிகாரிகளே
    இருந்து வந்தார்கள்.அதிலும் முஸ்லீம்களே கூடுதலாக இருந்தார்கள்.
    அவ்வேளை அம்பாரை நகரம் ஒருகட்டுக்கோப்புடன் இன சௌஜன்யத்தோடு எல்லாமக்களும்
    சந்தோசமாக தங்கள் தங்கள் கருமங்களை செய்துகொண்டிருந்தனர்.
    மகிந்த ராஜபக்க்ஷ அவர்களின் ஆட்சிமாற்றத்தலிருந்து திரைமறைவு
    காய்நகர்த்தல்கள் மூலம் எம்மவர்கள்இப்பதவிகளிலிருந்து
    ஒரம் கட்டப்பட்டு வந்ததுடன், நாளடைவில் பௌத்த அதிகாரிகளை
    தவிர வேறுயாரும் இங்கு திணகை்களத் தலைவராக இருக்க
    முடியாது என்ற எழுதப்படாத சட்டம்
    இங்கு உருவானதை எமது எத்தனை அரசியல் வாதிகளுக்கு தெரியும்?
    அம்பாரை எம்மை விட்டுப்போய்
    பலகாலமாகி விட்டது.இனரீதியான
    கட்சிகளை தொடங்கி சமூகத்தின்
    உருமைக்காகவும் பாதுகாப்புக்காகவும்
    பாடுபடுகின்றோம் என காலத்துக்காலம் தேர்தல் மேடைகளில்
    கூப்பாடு போட்டே; இருந்தவகைளையும்
    பறிகொடுத்து நிர்க்கதியான நிலையே
    எம்சமூகத்துக்கு ஏற்பட்டுள்ளதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் முஸ்லீம்கள் என்ற
    பெயரையும், எமது சூரத்தையும் வைத்துக்கொண்டால் மட்டும் போதாது
    எமது சிந்தனைகள்,செயற்பாடுகள்
    பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் போன்றவை அத்தனையிலும் இஸ்லாம்
    உயிரோட்டமாக காட்சியளித்து அன்னியவர்களால் கவரக்கூடியவாறு
    அது உருமாற்றம் பெறவேண்டும். இன்று எமது செயற்பாடுகள் மற்றவர்களுக்கு குரோத்தையும் கோபத்தையும், பொறாமையையும்
    காழ்புணர்வயும் ஏற்படித்தியதால் அவர்கள் எம்மை
    வதைக்க முற்பட்டுக்கொண்டுள்ளார்கள்.இதற்கு
    யார்மீதும் பழிபோடவேண்டிய அவசியமில்லை.எமது அரசியல் தலைமைகள் தொடக்கம் நாம் ஒவ்வொருவரும் மாறவேண்டும்.
    எமது அரசியல் தலைமைகள்தான்
    அன்னியசமூகத்தில் எம்மை பற்றிய
    அளவு கோல் ஏனனில் அவர்கள்தான்
    நாடு முழுவதும் நன்கு அறியப்பட்டவர்கள் அத்தோடு நாம்தான்
    அவர்களை தெரிவும் செய்திருக்கின்றோம். பட்டம் பதவிகளுக்காக சுகபோக வாழ்வுக்காக
    மட்டும் இனரீதியான கட்சிகளை தொடங்கி துவேசத்தையும், இனங்களுக்கிடையே குரோதத்தையும்
    எமது அரசியல் தலைமைகள் வளர்த்து
    வருகின்றார்கள் என்பதை நாம் அறியாவிட்டாலும் சிங்கள தமிழ் மக்கள் நன்கு அறிந்ததன்வௌளிப்பாடே இன்நிலமை என்பது பற்றியும் நாம்சிந்திக்காமல் இருக்கமுடியாது.
    தேர்தல் வரும்போது தேசியகட்சிகளை
    பேரினவாதகட்சிகளென்றும் சிறுபான்மையினங்களை அடக்கி ஆள்பவைகள்என்றும், பிரச்சாரம்
    செய்து விட்டு தேர்தல் முடிந்த கையோடு அவர்களோடு இணைந்து
    அமைச்சரவையிலே பங்கொண்டு
    தம்மை தெரிவு செய்த மக்களின்
    பிரச்சினைகளை ,உரிமைகளை பற்றி
    என்ன கதைப்பது ,என்னசெய்வது என்றுவிளங்காமல் மௌனிகளாகுவதும் , அவர்களின்
    சுயலாபங்களை பெறுவதற்கு அவர்கள்
    காட்டும் அக்கறையையும் பார்த்து
    இவர்கள்தானா இஸ்லாம் சொல்லும்
    தலைவர்கள் என மற்றவர்கள் மதிப்பீடு செய்தால் எம்மை பற்றி என்ன நினைப்பார்கள் எமக்கு விடிவுதான் எங்கே என்பதை நாம் சிந்திக்க தலைப்பட வேண்டும்.மதத்தாலும் கலாசாரத்தாலும் எமது நாட்டில், மற்றவர்களில் இருந்து நாம் வேறுபட்டாலும் அரசியலில் இருந்தும்,
    ஏனய மனிதப்பண்புகளில் இருந்தும்,
    நாட்டுப்பற்றிலிருந்தும், நாம்வேறுபாடடைய வேண்டிய அவசியமில்லை. இவைகளில் நாம் அவர்களோடு ஒன்றித்து பயணிக்க
    வேண்டும்.அப்போதுதான் எங்களுக்கிடையே உள்ள முறுகல் நிலைகள் தணியும்.ஏனெனில் ஒருபிரிவு சிங்கள மக்கள்எங்களோடு
    முரண்படும்போது மற்வர்கள் எமக்காக
    எமது நியாயத்திற்காக குரல் கொடுப்பார்கள். ஆனால் தற்போது
    எமது பக்கம் நியாயம் இருந்தாலும் எமக்காக கதைக்க யாருமில்லை நாம்
    முற்றாக அவர்களை விட்டு விலகி விட்டோம். இன்நிலை மிகவும் ஆபத்தானது. எனவே நாம் எல்லா தேசிய கட்சிகளிலும் இருக்கவேண்டும்
    JVPலும் கூடநாம் அங்கத்துவம் பெற
    வேண்டும்.தேசியரீதியான அமைச்சு பதவிகளைப்பெற்று எமது ஒருசில அமைச்சர்கள் தமது வாக்கு வங்கிகளை மட்டும் பார்த்துக்கொண்டுமுஸ்லீம்கள்
    என்ற கோசத்தோடுமட்டும் பயணிக்கின்றார்களே இவர்கள் எமது
    சமூகத்தை வேரறுக்க வந்ததவர்கள்
    என்பதை நாம் உணர வேண்டும். எனவே தற்போது தோற்றுவிக்க பட்டுள்ள சிஙகள முஸ்லீம் முரண்பாடுகள்
    பொலிஸ், கோடு ,நீதிமன்றம்,வழக்கு
    பேச்சுவார்த்தை, நஸ்டஈடு போன்றவைகளால் தீர்க்கக்கூடியதல்ல
    மாறாக நாம் ஏனய இனமக்களோடு
    எந்தெந்த வழிகளில் ஒன்றாய் சேர்ந்து
    ஒருமித்து வாழமுடியுமோ அந்த வழிகளை கண்டறிவது வசியமாகும்.
    இங்கு வட கிழக்கிக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லீம்களை பற்றி நாம்
    அதிகம் கரிசனைகொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.