Header Ads



பொன்சேக்கா வருவாரா..? கொலை குற்றவாளியாக்க முயற்சி

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சிறையில் அடைக்கும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தரப்பு தீவிரமான நிலைப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் அவ்வாறான எதுவும் நடந்துவிடக் கூடாது என்ற அச்சம் காரணமாக, பொன்சேகா மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவுடன் தொடர்புடைய ஒருவரினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த நடவடிக்கைகளுக்காக ஆயுத வியாபாரம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கோடீஸ்வர வர்த்தர் ஒருவர் பணம் வழங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் சரத் பொன்சேகா தொடர்புபட்டுள்ளதாக ஊடாக பிரச்சாரம் ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவரின் ஊடக பிரதானி செயற்படவுள்ளார்.

எப்படியிருப்பினும் இந்த அமைச்சு பதவியை சரத் பொன்சேகாவுக்கு வழங்குமாறு கடந்த 22ஆம் திகதி பிரதமரினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட அமைச்சரவை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த பதவி சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், சரத் பொன்சேகாவுக்கு அந்த பதவி வழங்கப்படுவதற்கு பல தரப்பில் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளதாகவும் குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த வாரத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்தப் பதவியிலிருந்து அகற்றப்படுவார் என பரவலாக பேசப்பட்டன. அது கொழும்பு அரசியல் பெரும் சூறாவளியை ஏற்படுத்தியிருந்த நிலையில் பொருளாதாரத்திலும் சிறு பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பொன்சேகாவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை வெற்றியளிக்குமாயின், மைத்திரி - ரணில் தரப்புகளுக்கு இடையில் மீண்டும் பாரிய அரசியல் மோதல் ஏற்படும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments

Powered by Blogger.