Header Ads



பஸ் குண்டு வெடிப்புச் சம்பவம் - வதந்திகளை நம்பவேண்டாம்

பண்டாரவளை – தியத்தலாவை – கஹகொல்ல பிரதேசத்தில், பேரூந்து ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் பரவிச் செல்லும் சில வதந்திகள் உண்மைக்கு புறம்பானவை என காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது

வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து தியத்தலாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களுள் ஒருவர் தப்பிச்சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

எனினும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தியத்தலாவை –எல்லேகம பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர், சிகிச்சைகளின் பின்னர், வைத்தியர்களின் அறிவுறுத்தல் அடிப்படையிலேயே வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

காவற்துறை ஊடக பேச்சாளர் காவற்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

பேரூந்தில் பயணித்த இராணுவச் சிப்பாய் ஒருவர் தம்வசம் வைத்திருந்த கைக்குண்டு ஒன்று வெடித்ததன் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என அரச பகுப்பாய்வாளர் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், தியத்தலாவை மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு இராணுவ சிப்பாய்களைத் தவிர ஏனைய 17 பேரிடமும் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.