Header Ads



சபாநாயகராக புதிய ஒருவரை, நியமிப்பது குறித்து கவனம்

பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சபாநாயகராக புதிய ஒருவரை நியமிப்பது குறித்து சிலர் கவனம் செலுத்தி வருவதாக அறியமுடிகின்றது.

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுபபினரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை மீண்டும் சபாநாயகராக நியமிக்க குறித்த தரப்பினர் தீர்மானித்துள்ளதாவும் தெரியவருகின்றது.

இதற்கான பேச்சுகள் உள்ளக ரீதியில் இடம்பெற்று வருவதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவை பிரதமராக நியமிக்குமாறு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த யோசனையை அவர்கள் நிராகரித்திருந்தாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றே தாம் பிரார்த்திப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று தெரிவித்திருந்தார்.

எவ்வாறிருப்பினும், கொழும்பு அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் குழப்ப நிலைமைகளுக்கு மத்தியில் சபாநாயகர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்படுவதாக அறிய முடிகின்றது.

நாடாளுமன்ற விவாதங்களில் தமக்கு உரிய காலத்தை வழங்க மறுக்கப்படுவதாக தெரிவித்து மஹிந்த அணியினர் சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் கடந்த கால சபை அமர்வுகளில் வாதங்களில் ஈடுபட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.