Header Ads



முஸ்லிம் சகோதரரின் ஆத்திரம், சுதாகரித்த மஹிந்த, பேச்சை மாற்றிய கம்மன்பில

கல்கிஸையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான கூட்டமொன்று நடைபெற்றதாம். அதில் கலந்து கொண்ட உதய கம்மன்பில எம்.பி, சிறுபான்மை இனங்களுக்கு எதிராக விளாசித் தள்ளிக் கொண்டிருந்தாராம்.

அப்போது கூட்டத்தில் இருந்த முஸ்லிம் அன்பர் ஒருவர், ""என்னய்யா நீங்கள்.... இன்னமும் திருந்தவில்லையா? அப்போது இப்படிப் பேசிப் பேசியே மஹிந்தவை பதவியில் இருந்து தூக்கினீர்கள்? இப்போது இப்படிப் பேசிப்பேசி தேர்தலில் அவரை மண்கவ்வச் செய்யப் போகிறீர்கள்...'' என்றாராம் ஆத்திரமாக.

அப்போது உடனே சுதாகரித்த மஹிந்த ராஜபக்ஷ கை சைகையைக் காட்டி உதய கம்மன்பிலவை பார்த்து ஏதோ கூற பேச்சு வேறு பக்கம் திசை திரும்பியதாம் .... எல்லா அரசியல் தலைவர்களும் கவிழ்வது பக்கத்தில் இருக்கும் நட்புகளால்தான்....! S/O

3 comments:

  1. Intha naatharikkellaam oru katchi oru kooottam...
    Mahinda innum vilangikkollavittaal...avarum ithartkellam support endruthane arttam!!!!

    ReplyDelete
  2. சிறு பான்மை மக்களின் விரோதியும் மாபெரும் துவேசியும் இந்த மகிந்த ராஜபக்ச என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. இவர் மிகவும் ஆபத்தானவர். இவரை நம்பிய சந்திரிக்கா, பிரபாகரன், முஸ்லீம் சமூகம், சர்வதேச நாடுகள் என பல பட்டியல்கள். அவரது குடும்பமே மாபெரும் துவேஷிகளும், தமது எதிரிகளை கொலைசெய்தே தங்களது ஆத்திரத்தை பலி தீர்த்துக் கொள்ளும் சுபாவம் உடையவர்கள். மிகவும் பயங்கரமானவர்கள். ஜனநாயகம் என்பதை கடுகளவும் நம்பாதவர்கள். அவரது ஆட்சியில் நடந்தேறிய அனைத்து விடயங்களும் அவர் நன்கு அறிந்தவராகவே இருந்தார். ஆக எல்லா அரசியல் தலைவர்களும் பக்கத்தில் உள்ளவர்களால் தான் கவிழ்வது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும். இப்படியான சிந்தனை போக்கு மக்களையும் சமூகத்தையும் பிழையாக வழிநடத்துவதாகவே கருதுகிறோம்.

    ReplyDelete
  3. சிறு பான்மை மக்களின் விரோதியும் மாபெரும் துவேசியும் இந்த மகிந்த ராஜபக்ச என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. இவர் மிகவும் ஆபத்தானவர். இவரை நம்பிய சந்திரிக்கா, பிரபாகரன், முஸ்லீம் சமூகம், சர்வதேச நாடுகள் என பல பட்டியல்கள். அவரது குடும்பமே மாபெரும் துவேஷிகளும், தமது எதிரிகளை கொலைசெய்தே தங்களது ஆத்திரத்தை பலி தீர்த்துக் கொள்ளும் சுபாவம் உடையவர்கள். மிகவும் பயங்கரமானவர்கள். ஜனநாயகம் என்பதை கடுகளவும் நம்பாதவர்கள். அவரது ஆட்சியில் நடந்தேறிய அனைத்து விடயங்களும் அவர் நன்கு அறிந்தவராகவே இருந்தார். ஆக எல்லா அரசியல் தலைவர்களும் பக்கத்தில் உள்ளவர்களால் தான் கவிழ்வது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும். இப்படியான சிந்தனை போக்கு மக்களையும் சமூகத்தையும் பிழையாக வழிநடத்துவதாகவே கருதுகிறோம்.

    ReplyDelete

Powered by Blogger.