Header Ads



ஜெனீவாவில் இலங்கை, முஸ்லிம்களை காணவில்லை..!

ஐக்கிய நாடுகள்  மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில்  நடைபெற்றுவருகின்ற   நிலையில் இலங்கை விவகாரம் தொடர்பில்  பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள்  மற்றும்   தென்னிலங்கை   பொது அமைப்புக் களின் பிரதிநிதிகள் என   பல்வேறு  தரப்பினரும் கலந்­து­கொண்டு உப நிகழ்­வு­களில் உரை­யாற்­ற­வுள்­ள­துடன் பல­ரையும் சந்­தித்து    பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வுள்­ளனர்.  

தமிழ் பேசும் மக்­க­ளைப்­பொ­றுத்­த­வ­ரையில் பாதிக்­கப்­பட்ட மக்கள் , மக்கள் பிர­தி­திகள் அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் என்­பன பல்­வேறு தரப்­பினர்   இம்­முறை ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்து கொண்டு  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­ப­டாமை தொடர்பில் வலி­யு­றுத்­த­வுள்­ளனர்.  

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் எம்.பி.க்கள், மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள் உள்ளடங்கிய கொண்ட ஐந்­து­பேர் கொண்ட குழு ஜெனிவா நோக்கி செல்­ல­வுள்­ளது.   

இது  தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ள தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்பினர் சிறி­தரன்,  இலங்கை அர­சாங்கம்   2015 ஆம் ஆண்டு வழங்­கிய வாக்­கு­று­தி­களை  நிறை­வேற்­ற­வில்லை என்றும்   எனவே,  இம்­முறை  ஜெனிவா மனித  உரிமை கூட்டத் தொடரில் கலந்து கொண்டு பாதிக்­கப்­பட்ட மக்­களின்  நிலைமை தொடர்­பாக எடுத்­து­ரைப்­பதா­கவும் கூறி­யுள்ளார். அத்­துடன்  ஜெனிவா வளா­கத்தில் சர்­வ­தேச  இரா­ஜ­தந்­தி­ரி­களை  சந்­தித்து கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­த­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார். 

மேலும்  பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நி­தி­களும் இம்­முறை ஜெனிவா நோக்கி பய­ணிக்­க­வுள்­ளனர்.   குறிப்­பாக அரச சார்­ பற்ற நிறு­வ­னங்­களின் ஏற்­பாட்டின் அடிப்­ப­டையில்    வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களின்   ஒவ்­வொரு மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும்   தெரிவு  செய்­யப்­பட்ட  பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நி­திகள் இம்­முறை ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.   

இதற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன.  அத்­துடன்  தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் சார்பில்    அதன் தலை 

வர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் மற் றும் செல்­வ­ராஜா கஜேந்­திரன் உள்­ளிட்ட பல்­வேறு  உறுப்­பி­னர்­களைக் கொண்ட குழுவும்  இம்­முறை  ஜெனி­வாவில் முகா­மிட்டு  பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சினை தொடர்பில் எடுத்­துக்­கூ­ற­வுள்­ளது.    

இதே­வேளை, வட­மா­காண சபை அமைச்சர் அனந்தி சசி­த­ரனும் வழ­மை­போன்று இம்­மு­றையும் ஜெனிவா கூட்டத்  தொடரில் கலந்து கொண்டு  காணாமல் போன மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில்  சர்­வ­தேச சமூ­கத்தை தெளி­வு­ப­டுத்த இருக்­கின்றார்.  

பாதிக்­கப்­பட்ட மக்கள் மற்றும் மக்கள் பிர­தி­நி­திகள் , அரச சார்­பற்ற மக்கள் பிர­தி­நி­திகள்   ஜெனிவா வளா­கத்தில் நடை­பெறும் உப­கு­ழுக்­கூட்­டங்­களில் கலந்து கொண்டு உரை­யாற்­ற­வுள்­ள­துடன்   சர்­வ­தேச  ராஜ­தந்­தி­ரி­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ளனர்,.

இது இவ்­வா­றி­ருக்க தென்­னி­லங்­கையின் ""எலிய"" அமைப்பின் பிர­தி­நி­தி­யான முன்னாள் பிரதி அமைச்சர்   சரத் வீர­சே­க­ரவும்   ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்து கொண்டு    பிர­சாரம் செய்­ய­வி­ருக்­கிறார். அதா­வது இலங்கை அரசாங்கம்   இரா­ணு­வத்­திற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் செயிட் அல் ஹுசைன்  கூறு­கின்ற  அனைத்­தையும்  அர­சாங்கம் கேட்­ப­தா­கவும் அவர்    ஜெனி­வாவில் எடுத்­துக்­கூ­ற­வுள்­ள­தா­கவும்  அறி­வித்­துள்ளார். 

அர­சாங்கத் தரப்பு தாம்  எவ்­வாறு  நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம் என்­பது குறித்து ஜெனி­வாவில் விளக்­க­ம­ளிக்­க­வுள்­ள­துடன் ஜெனிவா வளா­கத்தில் நடை­பெறும் உப­கு­ழுக்­கூட்­டங்­க­ளிலும் கலந்­து­கொண்டு தமது பக்க நியா­யங்­களை வெளிப்­ப­டுத்­த­வுள்­ளது.

இதற்­காக வெளி­வி­வ­கார அமைச்சின் உயர்  அதி­கா­ரிகள்   குழு  ஜெனிவா செல்­ல­வுள்­ளது. அதே­போன்று   வெளி­வி­வ­கார அமைச்சின் உயர் அதி­கா­ரி­க­ளுடன்   ஜெனி­வா­வி­லுள்ள இலங்கை தூத­ரக அதி­கா­ரி­களும்  கூட்­டங்­களில் உரை­யாற்­ற­வுள்­ளனர். 

அதே­போன்று, சர்­வ­தேச சமூ­கமும் இலங்கை தொடர்­பாக பல்­வேறு விட­யங்­களை வலி­யு­றுத்­த­வுள்­ளது.   சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­திகள்,  சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் ஆகியோர்  இலங்கை தொடர்­பாக  உரை­களை நிகழ்த்­த­வுள்­ளனர். குறிப்­பாக  இலங்­கை­யானது 2015ஆம் ஆண்டு  ஜெனிவா பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­த­வேண்­டு­மென்றும்  பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை    முன்­னெ­டுத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்­க­வேண்­டு­மென்றும்  சர்­வ­தேச சமூகம் வலி­யு­றுத்­த­வுள்­ளது. 

மார்ச்  15ஆம் திகதி இலங்கை தொடர்­பான பூகோள காலக்­கி­ரம மீளாய்வு விவாதம் ஜெனி­வாவில்  நடை­பெ­ற­வுள்­ளது. இதே­போன்று மார்ச் 21ஆம் திகதி  ஜெனிவாப் பிரே­ர­ணையை  இலங்கை எவ்­வாறு அமுல்­ப­டுத்­தி­யது என்­பது குறித்து ஆராயும் விவா­தமும் நடை­பெ­ற­வுள்­ளது. அதே­போன்று  14 க்கும் மேற்­பட்ட  உப­கு­ழுக்­கூட்­டங்­களும்  ஜெனிவா வளா­கத்தில் இம்­முறை கூட்டத் தொடரில் நடை­பெ­ற­வுள்­ளன. 

 இலங்கை  அர­சாங்கம்  சர்­வ­தேச பங்­க­ளிப்­புடன் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டவேண்டுமென தெரிவித்து 2015ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரில்  பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டது.  அந்தப் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கமும்  அனுசரணை வழங்கியிருந்தது. 

அந்தப் பிரேரணையானது கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற  ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34 ஆவது  கூட்டத் தொடரில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு  இலங்கைக்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்பட்டது. 

No comments

Powered by Blogger.