Header Ads



சுவிஸ் - இலங்கை முஸ்லிம் சிறுவர்களின், அல்குர்ஆன் போட்டி நிகழ்ச்சி (படங்கள்)


சுவிசர்லாந்து வாழ் இலங்கை முஸ்லிம் சிறுவர்களுக்கான, அல்குர்ஆன் போட்டி நிகழ்ச்சிகள் நேற்று சனிக்கிழமை (17) சூரிச் - சிலீரன் நகரில் நடைபெற்றது.

ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலைய தலைவர் அல்ஹாஜ் ஹனீப் மொஹமட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், இலங்கைச் சிறார்களுடன் இணைந்து, வேறு நாட்டு சிறுவர்களும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் உரையாற்றிய ஹனீப் மொஹமட், இலங்கை முஸ்லிம் சிறுவர்களுக்கான சிறந்த மேடை இதுவெனவும்,அவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தவும், தமது ஆற்றல்களை வெளிக்காட்டவும் இம்மேடை உதவுவதாகவும் குறிப்பிட்டதுடன், சிறிய முரண்பாடுகளை காரணம்காட்டி தமது பிள்ளைகளை பள்ளிவாசலுக்கோ அல்லது அல்குர்ஆன் மதரசாவுக்கோ அழைத்து வருவதை நிறுத்திக்கொள்ள  வேண்டாமெனவும் நாம்  எல்லோரும் ஒற்றுமையாகவும், சகோதர உணர்வுடனும் வாழ வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.

குறித்த அல்குர்ஆன்  போட்டி நிகழ்ச்சிக்கு பொஸ்னியா நாட்டைச் சேர்ந்த இருவர் நடுவர்களாக கடமையாற்றியதுடன், மாணவர்களின் குழுப் பாடல், நாடகம் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.

ஐரோப்பிய இஸ்லாமிய நிலையத்தின் இளையோர் நிகழ்வை தொகுத்து வழங்கியதுடன், அவர்களே நிகழ்வுக்கான பெரும்பாலான ஏற்பாடுகளை செய்திருந்ததுடன், மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசலில் கற்பித்தலில் ஈடுபடுபவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.









3 comments:

  1. விட்டுக்கொடுக்கும் தன்மை ஒற்றுமை இருந்தாலே போதும் மஸ்ஜிதுல் ரவுதா நிறம்பு வலியும்

    ReplyDelete
  2. brother niyas every individual person should follow this, include your self.

    ReplyDelete

Powered by Blogger.