Header Ads



உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு, அதிர்ச்சித் தகவல்

உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு, ஏனைய சலுகைகள் எதனையும் வழங்காது, மாதாந்தக் கொடுப்பனவாக, 15 ஆயிரம் ரூபாயை மாத்திரம் வழங்குவதற்கு,

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. 

“இதன்பிரகாரம், மோட்டார் சைக்கிள், தொலைபேசிக் கொடுப்பனவு, தொலைநகல் (பெக்ஸ்) இயந்திரங்கள் போன்றவை வழங்கப்படமாட்டாது” என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார். 

“எனினும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு தொலைபேசி உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகள் தேவை என்றால், உள்ளூராட்சி ஆட்சி நிர்வாகத்தை சரியாக முன்னெடுத்து, வரி வருமானத்தின் ஊடாக இவ்வாறான சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்” எனவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். 

 “இதேவேளை, உள்ளூராட்சி மன்ற அமர்வுகளை நடத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கினால், மன்றங்களுக்குச் சொந்தமான மண்டபங்கள் அல்லது நிதி இயலுமைக்குப் பொருத்தமான வகையில் மாற்று இடங்களில் அமர்வுகளை தற்போதைக்கு நடத்த முடியும்” என்றும் அமைச்சின் செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார். 

No comments

Powered by Blogger.