Header Ads



"எனது மகனை கைது செய்தவர்களை, நான் பார்த்து கொள்கின்றேன்”

கடந்த காலங்களில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக செயற்பட்ட அரசியல்வாதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியுடனான இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த எச்சரிக்கை விடுத்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைந்து அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழுவினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த தயாசிறி ஜயசேகர மற்றும் திலங்க சுமத்திபால மற்றும் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த நாமல் ராஜபக்ச, விமல் வீரவன்ஷ, உதய கம்மன்பில ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியுடன் பேசி கொண்டிருக்கும் போது, நாமல் கேள்வி ஒன்றை வினவியுள்ளார்.

“ஜனாதிபதி அவர்களே என்னை கைது செய்தது பரவாயில்லை.. ஏன் எனது தம்பி யோஷிதவை கைது செய்தீர்கள்...?” என வினவியுள்ளார்.

“எனக்கு தெரியாது.. அந்த அமைச்சின் அதிகாரம் என்னிடம் இல்லை. அது பிரதமரிடம் தான் உள்ளது..” என ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.

“அப்படி என்றால் எனது தம்பியை கைது செய்ததற்கும் உங்களும் எந்த தொடர்பும் இல்லையா”? என நாமல் வினவியுள்ளார்.

அந்த சம்பவம் தொடர்பில் தனக்கு ஒன்றும் தெரியாதென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு, சாகல ரத்நாயக்கவிடமே உள்ளது. அதன் செயற்பாட்டுடன் நான் தொடர்புப்படவில்லை. அழுத்தம் பிரயோகிக்கவும் இல்லை..” என ஜனாதிபதி கூறியுள்ளார்.

நாமல் ராஜபக்ச அந்த சந்தர்ப்பத்திலேயே மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பொன்று மேற்கொண்டுள்ளார். “நான் ஜனாதிபதியுடனே உள்ளேன். யோஷிதவை கைது செய்தமைக்கும், ஜனாதிபதிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அவர் கூறினார், அனைத்தையும் அமைச்சர் சாகல ரத்நாயக்க தான் செய்துள்ளார்” என நாமல் குறிப்பிட்டுள்ளார்.

“சரி.. சரி..! எனது மகனை கைது செய்தவர்களை நான் பார்த்து கொள்கின்றேன்” என கூறி விட்டு மஹிந்த தொலைபேசியை துண்டித்துள்ளார் என குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் மஹிந்த தரப்பினருக்கு மக்கள் வழங்கிய பாரிய ஆதரவினை அடுத்து மஹிந்தவின் எச்சரிக்கை வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. Kaaattu dharbaar start.... so be careful... all of you

    ReplyDelete
  2. யஹபாலன கவபாலனயாக மாறி இறுதியில் சனாதிபதிக்கு அட்ரஸ் இல்லாமல் போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை. இந்த நாட்டு மக்கள் பச்ச மடையன்கள் என்பது நிரூபித்து அதன் விளைவை மிக விரைவில் அனுபவிக்கவும் போகின்றார்கள்.இந்த செயலைத்தான் அல்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது. واتقوا فتنةلاتصيبن الذبن ظلموا منكم خاصة، அநியாயம் செய்தவர்களை மட்டுமன்றி அனைவரையும் பாதிக்கும் அந்த குழப்பத்தைவிட்டும் நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இனி வரப் போகும் அநியாயமும் அட்டூழியங்களும் இந்த நாட்டில் வாழும் அத்தனை சாதாரண மக்களையும் பாதிக்கப் போகிறது.அநியாயக்காரனை பதவியில் இருந்து விலக்கிய அதே மடையர்கள் இப்போது அந்த அநியாயக்காரனைக் கொண்டுவந்துள்ளார்கள். அவனுடைய அட்டூழியம் சனாதிபதியின் வீட்டில் அவரை அச்சுறுத்தியதில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

    ReplyDelete
  3. SINCE JANUARY 2015 "THE MUSLIM VOICE" CALLED THE YAHAPALANA GOVERNMENT TO ESTABLISH THIS COMMISSION OF INQUIRY INTO THE ALUTHGAMA/BERUWELA INCIDENTS COMMENTING CONTINUOUSLY IN THE TAMIL AND ENGLISH SOCIAL MEDIA AND NEWS WEBSITES OF SRI LANKA AND TAMIL NADU. THE YAHAPALANA GOVERNMENT AND THE DECEPTIVE MUSLIM POLITICIANS AND MUSLIM CIVIL SOCIETY GROUPS HOODWINKED THE HUMBLE MUSLIM VOTERS TILL NOW. THE LOCAL GOVERNMENT ELECTIONS, ESPECIALLY THE BERUWELA AND KALUTARA RESULTS HAS STRENGTHENED THE SLPP/PROF. G.L. PEIRIS TO MAKE A CHALLENGE TO THE GOVERNMENT TO APPOINT THIS COMMISSION WHICH WILL REVEAL THE TRUTH OF THE SCHEMERS, INCLUDING THE MUSLIM MP's INVOLVED IN THIS VIOLENCE BEHIND THE SCENE ALONG WITH THE "WITCH OF POLITICS" A DENTIST PARLIAMENTARIAN WHO RAN AWAY FROM THE COUNTRY AFTER ARRANGING THE VIOLENCE ON THE DAY THE INCIDENTS TOOK PLACE.
    THE SLPP AND NAMAL SHOULD ASK PRESIDFENT MAITHRIPALA SIRISENA TO REVEAL THE TRUTH ABOUT THE INSTIGATED ALUTHGAMA/BERUWELA VIOLENCE THAT TOOK PLACE IN JUNE 2014. LIKE THE ARESSTING OF YOSITHA RAJAPAKSA TRUTH HAS BEEN REVEALED, THE ALUTHGAMA/BERUWELA VIOOLENCE TRUTH HAS ALSO GOT TO BE REVEALED. MAHINDA SHOULD ALSO BE CREFULL ABOUT THE MUSLIM “MUNAAFIKK” CONSPIRATORS” WHO POLITICALLY STABBED HIM BEHIND HIS BACK IN 2015 PRESIDENTIAL AND GENERAL ELECTIONS. THESE MUSLIMS INCLUDING A MUSLIM JOURNALIST AND THE SON OF A FORMER MUSLIM GOVERNOR CAN BEEN SEEN APPROACHING Prof. G.L. PEIRIS – CHAIRMAN OF THE SLPP REVEALING LONG STORIES ABOUT SLPP SUPPORTERS ATTACKING THE MUSLIM VOTERS AND SEEKING HELP. Prof. G.L. PEIRIS’S RESPONSE TO THIS CUNNINGNESS SHOULD TEACH THESE POLITICAL VULTURES A GOOD LESSON.
    THE MUSLIMS CANNOT BE HOODWINKED ANYMORE. THEY KNOW WHOM TO SUPPORT NOW, Insha Allah.
    "THE MUSLIM VOICE"

    ReplyDelete

Powered by Blogger.