Header Ads



யார் இந்த, ஹம்ஸா ஹாபிழ்


கண்டி மடவளை பஸார் ஜாமிஉல் கைராத் ஜுமுஆ பள்ளி நம்பிக்கையாளர் சபைத் தலைவராக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஏகமனதாக அஷ்ஷெய்க் ஹம்சா பின்னூரி கடந்த 23.02. 2018 வெள்ளிக்கிழமை தெரிவு செய்யப்பட்டார். அவர்கள்  பற்றிய சுருக்கக் குறிப்பு.

யார் இந்த ஹம்ஸா ஹாபிழ்.

மடவளையின் பூர்வீகத்தைக் கொண்ட 1966 ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்து சபையில் பணி புரிந்து ஓய்வுபெற்ற மர்ஹூம் அமீருதீன் அவர்களுக்கும் மர்ஹூமா பாரீதா அவர்களுக்கும் அருமை மகனாக பிறந்தவரே  அஷ்ஷெய்க் ஹம்சா பின்னூரி அவர்கள் ஆவார்கள்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை மடவளை மதீனா தேசிய பாடசாலையில் கற்று பின்னர் குர்ஆன்  மனனம் மற்றும் ஷரீஆ துறை கல்வியின் மீதான ஆர்வம் காரணமாக பாகிஸ்தான் கராச்சியில் அமைந்துள்ள ஜாமிஆ இஸ்லாமிய்யா பல்கலைக்கழகத்தில் 1983 முதல் 1995 ஆம் ஆண்டு வரை அல்-குரான் மனனம் மற்றும் ஷரீஆ துறை கற்கையை வெற்றிகரமாகர்த்தி செய்தார்.

அத்தோடு தஜ்வீத் கலையில் சிறப்புத்தேர்ச்சியும்  பெற்று பட்டம் பெற்று நாடு திரும்பினார்.

இதன் பிறகு நாட்டிற்கு திரும்பிய  அஷ்ஷெய்க் ஹம்சா பின்னூரி அவர்கள் ஆரம்பம் முதல் பல காத்திரமான பணிகளை மார்க்கத்திற்காக முன்னெடுத்துச் சென்றார்கள்.

அவற்றுள்:

நாவலப்பிட்டி ஹாஷிமிய்யா அரபிக் கல்லூரியில் ,இரண்டு வருடங்கள் கட்பித்தலில் ஈடுபட்டார்,

அக்குறணை ரஹ்மானிய்யா அரபுக்க கல்லூரியில் சுமார் 12 வருடங்கள் ஹிப்ல் பிரிவின் பொறுப்புதாரியாக இருந்து பல மாணவர்களை ஹாபிழ்களாக உருவாக்கியுள்ளார்.

தற்போது கொழும்பை தலைமையகமாகக் கொண்டு நாடு முழுவதும் இயங்கும் தாருல் குரான் மதரஸாவின் மேற்பார்வையாளராக காத்திரமான பனி புரிகின்றார்.

இலங்கை ஜம்மிய்யதுல் உலமா கண்டி மாவட்ட கிளையின் நிறைவேற்றுக்குழு அங்கத்தவராக காணப்படும் இவர் மடவளை ஜம்மிய்யதுல் உலமாக் கிளையின் தலைவராகவும் காலத்திர்க்கேற்ப  பல காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகின்றார்.

எனவே தெளிவான சிந்தனை, பொறுமை மற்றும் பணிவுள்ளம் கொண்டவரான இவர்  மிகப்பொருத்தமான நேரத்தில் எமது ஊரை வழி நடத்தும் பணியை ஏற்றுள்ள காத்திரமான தலைவரான   அஷ்ஷெய்க் ஹம்சா பின்னூரி அவர்களுக்கு அல்லாஹுத்தாலா இலேசாக்கி தருவதோடு மேலான கூலியையும் சுவனத்தையும் வழங்குவானாக.

ஆமீன்.

தகவல் : மடவளை பஸார் ஜம்மியத்துல் உலமா 

No comments

Powered by Blogger.