Header Ads



சம்­பந்­தனும், சுமந்­தி­ர­னுமே துரோ­கிகள் - கஜேந்­தி­ர­குமார்

வட்­டுக்­கோட்டைத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டு பின்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்­கிரஸ் எந்­த­வொரு இடத்­திலும் சிங்­கள தேசத்தை அங்­கீ­க­ரித்­ததும் இல்லை, சிங்கக் கொடியை தூக்­கிப்­பி­டித்து கொண்­டா­டி­யதும் இல்லை எனத் தெரி­வித்த தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், சம்­பந்­த னும் சுமந்­தி­ர­னுமே சிங்கக் கொடியை ஏந்தி கொண்­டா­டு­வ­தா­கவும் அவர்­களே துரோ­கி கள் எனவும் குறிப்­பிட்­டுள்ளார்.

உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிடும் தமிழ்த் தேசியப் பேர­வையின் வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து வதி­ரியில் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­டத்­தி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

பண்டா –செல்வா ஒப்­பந்­தத்­தையும் டட்லி–செல்வா ஒப்­பந்­தத்­தையும் சிங்­க­ள­வர்கள் கிழித்து எறி­ய­வில்லை என்ற தோற்­றப்­பாட்டை உரு­வாக்கி சிங்­கள ஆட்­சி­யா­ளர்­களை நியா­யப்­ப­டுத்தும் அர­சி­யலைச் செய்­து­வரும் சுமந்­திரன், அந்த இரு ஒப்­பந்­தங்­களும் சமஷ்டி தீர்­வினை வலி­யு­றுத்­திய ஒப்­பந்­தங்கள் என்றும் அதனை அகில இலங்கை தமிழ்க் காங்­கிரஸ் எதிர்த்­த­தா­கவும் உப்­பு­வெ­ளியில் நடை­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­ட­மொன்றில் கூறி­யி­ருக்­கிறார்.

சுமந்­தி­ர­னுக்கு சரித்­திரம் தெரி­யாது. அவர் வாய் திறந்தால் கூறு­வது முழுக்க பொய். முதலில் அவர் சரித்­தி­ரத்தைப் படித்­து­விட்டு வர வேண்டும். தந்தை செல்­வ­நா­யகம்  பண்டா செல்வா ஒப்­பந்­தமும் டட்லி – செல்வா ஒப்­பந்­தமும் அர­சியல் தீர்வு முயற்­சி­க­ளுக்­கான ஆரம்பப் படி என்­றுதான் கூறி­யி­ருக்­கிறார். எங்­க­ளு­டைய இலக்கு சமஷ்டி. இந்த ஒப்­பந்­தங்கள் அதற்­கான ஆரம்பப் படி என்­றுதான் கூறி­யி­ருக்­கிறார். ஆனால் சுமந்­திரன் அவை யாவற்­றையும் திரி­வு­ப­டுத்தி சிங்­க­ள­வர்­களைக் காப்­பாற்றும் நோக்­கில் ­பொய்­யு­ரைக்­கிறார்.

இடைக்­கால அறிக்­கையின் முதல் பக்­கத்­தி­லேயே இலங்­கையின் இறைமை மக்­க­ளுக்­கு­ரி­யதாய் இருப்­ப­தோடு பரா­தீ­னப்­ப­டுத்த முடி­யா­ததும் பிரிக்­கப்­பட முடி­யா­த­து­மாக இருத்தல் வேண்டும் என தெளி­வாகக் குறிப்­பிட்­டி­ருக்க, அதனை மக்கள் வாசிக்க மாட்­டார்கள் வாசித்­தாலும் சாதா­ரண மக்­க­ளுக்கு அர­சி­ய­ல­மைப்பின் இடைக்­கால அறிக்­கையை புரிந்­து­கொள்ள முடி­யாது என்ற துணிவில் ஒற்­றை­யாட்­சி­யான இந்த இடைக்­கால அறிக்­கையை சமஷ்டி அர­சியல் தீர்­விற்­கான இடைக்­கால அறிக்கை என பொய்ப் பிர­சாரம் செய்து வரு­கிறார்.

தமிழ்க் காங்­கிரஸ் ஒற்­றை­யாட்­சியை ஆத­ரித்த கட்சி என்றும் இன்று திடீ­ரென சமஷ்­டியைக் கோரு­வ­தா­கவும் கூட அவர் கூறி­வ­ரு­கின்றார். ஒற்­றை­யாட்சி அர­சி­ய­ல­மைப்பு சோல்­பரி அர­சி­ய­ல­மைப்­பாக இருக்க அதிலே 50 இற்கு ஐம்­பது என்ற வகையில் பாது­காப்பு ஏற்­பா­டுகள் கொண்டு வர­வேண்டும் என்றும், இல்லை என்றால் சுய­நிர்­ணய அடிப்­ப­டையில் தமி­ழர்கள் தமி­ழ­ர­சாக பிரிந்து செல்ல பிரித்­தா­னிய அர­சாங்கம் ஏற்­பா­டுகள் செய்­ய­வேண்டும் என்றும் முதல் முத­லாக கோரிக்கை வைத்­த­தே காங்­கிரஸ் கட்­சிதான். 

அவ்­வாறு கோரிக்கை வைத்த ஜீ.ஜீ பொன்­னம்­பலம் பிரித்­தா­னிய அர­சாங்­கத்­துக்கு ரெலிக்­கிறாம் அனுப்­பி­விட்டு கப்­ப­லிலே பிரித்­தா­னி­யா­வு­ட­னான பேச்­சு­வார்த்­தைக்கு சென்­று­விட, இங்கு டி.எஸ்.சேன­நா­யக்க இங்­கி­ருந்த ஏனைய தலை­வர்­களை அர­வ­ணைத்து ஜீ.ஜீ. மட்­டுமே அந்தக் கோரிக்­கையை வைக்­கிறார் ஏனைய தலை­வர்கள் அதற்கு இணங்­க­வில்லை எனக் கூறி ஒற்­றை­யாட்­சிக்குள் இங்­குள்­ள­வர்­களை இணங்க வைத்தார். அத­ன­டிப்­ப­டையில் தான் ஒற்­றை­யாட்சி நிறை­வேற்­றப்­பட்­டது. இதுதான் வர­லாறு என்றார்.

நாங்கள் சிங்கக் கொடியை எதிர்க்­க­வில்லை என­கூறி கடந்த எழு­பது வரு­ட­மாக தமிழ்க் காங்­கிரஸ் துரோகம் இளைத்து வந்­த­தாகக் கூறு­கின்ற தமி­ழ­ரசுக் கட்சி, இன்று அதே சிங்கக் கொடியை சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளோடு இணைந்து கரங்­க­ளிலே ஏந்தி கொண்­டா­டு­கின்­றதே அப்போ நீங்கள் யார்? எங்­களைப் பார்த்து துரோ­கிகள் என்று சொன்ன உங்கள் கட்சி உங்­களைப் பார்த்து என்ன கூற­வேண்டும் ?

தமி­ழ­ரசுக் கட்சி நேர்­மை­யான கட்­சி­யாக அர­சியல் செய்­வ­தாக இருந்தால் சம்­பந்­தனும் சுமந்­தி­ரனும் துரோ­கிகள் எனக் கூற­வேண்டும். அதுதான் உண்மை. இன்று ஒரு கதையும் நாளைக்கு இன்­னொரு கதையும் கூறு­ப­வர்­க­ளல்ல நாங்கள். எங்­களைப் பொறுத்­த­வ­ரையில் 1977 ஆம் ஆண்டு வட்­டுக்­கோட்டைத் தீர்­மானம் எடுக்­கின்ற வரைக்கும் தமிழ்க் காங்­கிரஸ் இந்த நாட்­டினைப் பிரிக்கச் சொல்லிக் கேட்­க­வில்லை. இந்த நாட்­டிலே பல குறைகள் இருந்­தன. அதில் மாற்றுக் கருத்­தில்லை. இது ஒரு ஐக்­கிய நாடு. நாங்கள் இந்த நாட்டின் பிர­ஜைகள் என செயற்­பட்­டு­வந்தோம்.  

ஆனால் 1977 ஆம் ஆண்டு வரை நாங்கள் இந்த நாட்டின் கொடி­யையோ அங்­கீ­கா­ரத்­தையோ நிரா­க­ரிக்­க­வில்லை. நாமும் தமி­ழ­ரசுக் கட்­சியும் எமது வழி­க­ளிலே பல முயற்­கிகள் செய்தும் சிங்­கள தேசம் அத்­தனை முயற்­சி­க­ளையும் நிராகரித்தது. இந் நிலையில்தான் இந்த இரு தரப்புக்களும் இணைந்து தமிழ்த் தேசத்தைக் காப்பாற்ற நாங்கள் எங்களுக்கென ஒரு தனியரசை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தோம். அதனைடிப்படையில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றி மக்களின் ஆணையினைப் பெற்றோம். அதன்பின்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் எந்த ஒரு இடத்திலும் சிங்கள தேசத்தை அங்கீகரித்ததும் இல்லை. அவர்களின் சிங்கக் கொடியை கையில் தூக்கிப் பிடித்து கொண்டாடிதும் இல்லலை என்றார்.

No comments

Powered by Blogger.