Header Ads



காதலர் தினத்தில் ரணில், மைத்திரியை இணைக்க முயற்சி

அரசாங்கத்தின் இரண்டு தரப்பினரும் மீண்டும் இணையவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -14- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் அணியினரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக்கட்சியின் தனி அரசாங்கத்தை அமைக்க போவதாக முதலில் கூறினர்.

அதேபோல் தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முடியாது வெளியேற வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் கூறினர்.

எனினும் காதலர் தினத்தில் அமெரிக்க தூதரகமும், இந்திய தூதரகமும் இவர்களை ஒன்றாக இணைக்க தலையீடுகளை மேற்கொண்டுள்ளன.

இந்திய உயர்ஸ்தானிகரும், அமெரிக்கா தூதுவரும் இன்றைய காதலர் தினத்தில் பிரிந்துச் செல்விருந்த இரண்டு தரப்பினரையும் இணைக்கவும் ஆட்சியை முன்னெடுத்துச் செல்லவும் தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு தரப்பினரும் பிரிந்து செல்ல வேண்டாம் இணைந்திருங்கள் என்று அமெரிக்க தூதரகமும் இந்திய தூதரகமும் உத்தரவிட்டுள்ளன.

மேற்குல சார்பு கைபாவைகளான ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் இவ்வாறான உத்தரவுகளை ஏற்றுக்கொள்வார்கள் என்பதை நாம் அறிவோம்.

எனினும் நாட்டு மக்கள் இந்த ஆட்சி போதும் என்று கூறியுள்ளதால், மக்களின் நிலைப்பாட்டுக்கு செவிகொடுங்கள் என்று கோருவதாகவும் சிசிர ஜெயகொடி குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.